வல்லம், அக்.20- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கு நடைபெற்றது.
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் 15.10.2025 அன்று அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு கருத்தரங்கு நடைபெற்றது. அப்துல்கலாம் அவர்களின் பிறந்தநாள் கருத்தரங்கில் இக்கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி தலை மையேற்று உரை யாற்றும் போது அப்துல்கலாம் அவர்களின் கடினமான வாழ்க்கைப்பாதையில் பயணித்து எவ் வாறு புகழ்மிக்க குடியரசுத்தலைவராக மாறினார் என்று கூறிய அவர், அப்துல்கலாம் அவர்கள் எழுதிய அக்னிச் சிறகுகள் மற்றும் இந்தியா 2020 போன்ற புத்தகங்கள் வாழ்க்கையில் உத்வேகத்துடன் உயர் வதற்கு துணை செய்யும் பயனுள்ள புத்தகங்களை படிக்க வேண்டும் என்று மாணவர்களிடம் குறிப்பிட்டார்.
வாழ்த்துரை வழங்கிய இக்கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ஜி.ரோஜா, அப்துல்கலாம் அவர்கள் இந்திய நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்காக கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை, அக்னி, பிரித்வி, திரிசூல் போன்றவற்றை உருவாக்கி “இந்தியாவின் ஏவுகணை மனிதர்” என்ற பட்டத்தையும் பெற்றார் என்பதை விளக்கமாக கூறினார். மேலும் அவர் கூறுகையில் விபத்தில் உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கு எடை குறைந்த மற்றும் மலிவான விலையிலுள்ள உலோகங்களால் உருவாக் கப்பட்ட செயற்கை உறுப்புகளால் ஏழைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய மனிதாபிமான மிக்க மாமனிதர் என்று குறிப் பிட்டார். வாழ்த்துரை வழங் கிய முதன்மையர் ஜி.இராஜாராமன் அப்துல்கலாம் அவர்கள் மாணவர்களுடன் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை கழித்து, திறன்மிக்க இளைஞர்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள் என்று அப்துல்கலாமின் சிந்தனையை குறிப்பிட் டார். இக்கல்லூரியின் விரவுரையாளர் ஆர்.அய் யநாதன் பவர்பாயிண்ட் மூலம் அப்துல்கலாமின் வாழ்க்கை, அவர் கடந்து வந்த வெற்றிப்பாதை மற்றும் அவர் தம் கொள்கைகளையும் தனது சிறப்புரை வாயிலாக மாணவர்களிடையே பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர்கள் ஜி.செங் கொடி, வரவேற்புரை மற்றும் ஆர்.நடராஜன் நன்றியுரையாற்ற விழா இனிதே நிறைவுற்றது. நாட்டுநலப் பணித்திட்ட அலுவலர் பி.மாதவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
