அறிஞர் அண்ணாவின் நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்திடுவீர்! சட்டப் பேரவையில் ஆயிரம் விளக்கு நா.எழிலன் வலியுறுத்தல்!

3 Min Read

சென்னை, அக்.19– சட்­டப் பேர­வை­யில், கேள்வி நேரத்­தின்­போது, ஆயி­ரம் விளக்கு தொகுதி கழக உறுப்­பி­னர் டாக்­டர் எழி­லன் நாக­நா­தன், “அறிஞர் அண்ணா அவர்­க­ளின் நூல்­களை பிற­மொ­ழி­க­ளில் மொழி பெயர்க்க அரசு ஆவன செய்ய வேண்­டும்!” எனக் கோரிக்கை விடுத்­தார்.

சட்­டப் பேர­வை­யில் இது­கு­றித்து நடை­பெற்ற விவா­தம் வரு­மாறு:–

டாக்­டர் நா.எழி­லன்:அறி­ஞர் அண்ணா அவர்­க­ளின் நூல்­களை பிற மொழி­க­ளில் மொழி­பெ­யர்க்க அரசு ஆவன செய்­யுமா?

அமைச்­சர் மு.பெ. சாமி­நா­தன்: அறி­ஞர் அண்ணா அவர்­க­ளின் நூல்­க­ளைப் பிற மொழி­க­ளில் மொழி பெயர்க்க, முத­ல­மைச்­சர் அவர்­கள் அனு­மதி வழங்­கி­யி­ருக்­கி­றார்­கள். துறை­யின் சார்­பில் அதற்­கு­ரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

டாக்­டர் நா.எழி­லன்:‘கருத்து மோதல் நமக்­குள் ஏற்­ப­ட­லாம்; வளர்ச்­சிக்கு அறி­குறி அது. நம் மக்­கள் வன­வி­லங்­கு­கள் அல்ல. இது நாடு; காடு அல்ல. நாட்­டுக்கு முறை தேவை; காட்­டிற்கு ஆட்­சி­யல்ல. காட்டு முறையை கையாண்­டால் அதற்கு பெயர் ஜன­நா­ய­கம் ஆகாது; அதற்கு பெயர் பாசி­சம்’ என்று சொன்­ன­வர் அறிஞர் அண்ணா.

தந்தை பெரி­யா­ரு­டைய எழுத்­து­களை பிற மொழி­க­ளில் நாம் மொழிப்­பெ­யர்க்க திரா­விட மாடல் முதலமைச்சர் அவர்­கள் வழி­வ­குத்­தார். அத­னால், இன்று பெரி­யா­ரு­டைய பிறந்­த­நாளை மிக­வும் ஜன­ரஞ்­ச­க­மாக, மக்­க­ளின் குர­லாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கொண்­டா­டப்­பட்ட தொகுப்­பு­களை நாம் கண்­ட­றிந்­தோம். அறிஞர் அண்­ணா­வின் சமூக, அர­சி­யல் கொள்­கை­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அடிப்­படை கொள்­கை­யான பகுத்­த­றிவு, மாநில உரிமை, சமூக நீதி, மதச்­சார்­பின்­மை­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கொள்கை.
இன்­றைக்கு தமிழ்­நாட்­டின் அர­சி­யல் கொள்­கை­யாக மாறிய சூழ்­நிலை அறிஞர்
அண்­ணா­வின் உழைப்பு. எனவே, நாடெங்­கும் மாநில உரி­மை­கள் தளர்த்­திட,
வளர்ந்­திட, இனக் குழுக்­கள் தங்­கள் மொழியை பாது­காத்­திட
பல்­வேறு மாநி­லங்­க­ளில் சமூக அமைப்­பு­கள் எடுத்­துக்­காட்­டாக அமைய அறிஞர் அண்­ணா­வின் எழுத்­து­கள் பிற
மொழி­க­ளில் மொழி பெயர்க்க வேண்­டு­மென்­கிற கேள்­வியை தங்­கள் வாயி­லாக அமைச்­சர் அவர்­க­ளி­டத்­தில் கேட்டு அமர்­கி­றேன்.

அமைச்­சர் மு.பெ. சாமி
­நா­தன்:ஏற்­கெ­னவே உறுப்­
பி­னர் அவர்­க­ளு­டைய
வினா­விற் ­கான விடை­யைத் தந்­தி­ருக்­கி­றேன். முத­ல­மைச்­சர் அவர்­கள் அதற்கு
அனு­மதி வழங்­கி­யி­ருக்­கி­றார்­கள். அதே­போல, தந்தை பெரி­யா­ரு­டைய கருத்­து­
க­ளை­யெல்­லாம்
பிற­மொ­ழி­க­ளில் மொழி­பெ­யர்க்­கப்­பட்­ட­தை­யும் இங்கே குறிப்­பிட்­ டி­ருக்­கி­றார்­கள். அதே­போல, சட்டமேதை அண்­ணல்
அம்­பேத்­கர் அவர்­­களின் நூல்­களை­யெல்­லாம்­ கூட தமி­ழில் மொழி­பெ­யர்க்­கக்­கூ­டிய
நட­வ­டிக்­கைக்­கும் முத­ல­
மைச்­சர் அவர்­கள் உத்­த­ர­விட்டு, அதற்­கும் துறை­யின் சார்­பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­கி­றது. மேலும், உறுப்­பி­னர் அவர்­க­ளின் கருத்­து­கள் எது­வாக இருந்­தா­லும் நிச்­ச­ய­மாக முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் கவ­னத்­திற்கு எடுத்து சென்று, துறை­யின் சார்­பிலே நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­
கி­றேன்.

டாக்­டர் நா. எழி­லன்:Tony Blair Institute for Global Change என்ற ஒரு அமைப்பு ஆப்­பி­ரிக்கா துணைக் கண்­டத்­தில் இனக்­கு­ழுக்­கா­கப் பிரிந்த கீழ்­நி­லை­யி­லுள்ள நாடு­க­ளுக்கு எந்­த­வ­கை­யான அர­சாட்சி முறை ஏது­வாக இருக்­கு­மென்ற ஆய்­வின் அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது, அவர்­கள் பரிந்­துரை செய்­வது திரா­விட மாடல் ஆட்சி முறை­தான்  சமூக பொரு­ளா­தா­ரத்­தில் பின்­தங்­கிய மக்­களை உயர்த்­த­ளிக்­கும் என்ற
ஆய்­வினை வெளிப்­பாடு கொண்டு வந்­தார்­கள். அதன் தொடர்ச்­சி­யாக, நாம் பல்­வேறு தலை­வர்­க­ளுக்கு பல்­வேறு மரி­யா­தை­கள் செலுத்­து­கி­றோம். அதே­போல், திரா­விட மாடல் என்று சொல்­லும்­போது நம் தமிழ்­நாடு வளர்ச்­சிக்­கான பல்­வேறு சாத­னை­கள், அது காலை உண­வுத் திட்­ட­மாக இருக்­கட்­டும்; மதிய உண­வுத் திட்­ட­மாக இருக்­கட்­டும்; சத்­து­ண­வுத் திட்­ட­மாக இருக் கட்­டும்; நிலச்­சீர்த்­தி­ருத்­த ­மாக
இருக்­கட்­டும்; சமூக பொளா­தார வளர்ச்­சி­யா­கட்­டும்; சாத­னை­க­ளைக் காட்­சிப்­ப­டுத்தி, தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு இந்த சாத­னை­களை உணர
வைக்­கு­மாறு அருங்­காட்­சி­யம் அமைக்­கப்­ப­டுமா?

அமைச்­சர் மு.பெ.சாமி­நா­தன்: நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய நாய­கன் முத­ல­மைச்­சர் அவர்­கள், திட்­டங்­கள் மக்­க­ளுக்கு பல்­வேறு விதங்­க­ளில் எடுத்து சொல்­லப்­பட்டு வரு­கி­றது. பத்­தி­ரிகை மூல­மாக, ஒளி நாடாக்­கள் மூல­மாக, அரசு நிகழ்ச்­சி­கள் மூல­மாக
இன்­றைக்கு எடுத்து
சொல்­லப்­பட்டு வந்­தா­லும், உறுப்­பி­னர் அவர்­க­ளின் கருத்தை பரி­சீ­லிக்­கும் வகை­யில் திட்­டங்­க­ளைப் பற்­றிய அருங்­காட்­சி­ய­கம் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்கை முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் கவ­னத்­திற்கு எடுத்­துச் சென்று, துறை­யின் சார்­பில் பரி­சீ­லிக்­கப்­ப­டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *