சென்னை, அக்.19– சட்டப் பேரவையில், கேள்வி நேரத்தின்போது, ஆயிரம் விளக்கு தொகுதி கழக உறுப்பினர் டாக்டர் எழிலன் நாகநாதன், “அறிஞர் அண்ணா அவர்களின் நூல்களை பிறமொழிகளில் மொழி பெயர்க்க அரசு ஆவன செய்ய வேண்டும்!” எனக் கோரிக்கை விடுத்தார்.
சட்டப் பேரவையில் இதுகுறித்து நடைபெற்ற விவாதம் வருமாறு:–
டாக்டர் நா.எழிலன்:அறிஞர் அண்ணா அவர்களின் நூல்களை பிற மொழிகளில் மொழிபெயர்க்க அரசு ஆவன செய்யுமா?
அமைச்சர் மு.பெ. சாமிநாதன்: அறிஞர் அண்ணா அவர்களின் நூல்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்க்க, முதலமைச்சர் அவர்கள் அனுமதி வழங்கியிருக்கிறார்கள். துறையின் சார்பில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
டாக்டர் நா.எழிலன்:‘கருத்து மோதல் நமக்குள் ஏற்படலாம்; வளர்ச்சிக்கு அறிகுறி அது. நம் மக்கள் வனவிலங்குகள் அல்ல. இது நாடு; காடு அல்ல. நாட்டுக்கு முறை தேவை; காட்டிற்கு ஆட்சியல்ல. காட்டு முறையை கையாண்டால் அதற்கு பெயர் ஜனநாயகம் ஆகாது; அதற்கு பெயர் பாசிசம்’ என்று சொன்னவர் அறிஞர் அண்ணா.
தந்தை பெரியாருடைய எழுத்துகளை பிற மொழிகளில் நாம் மொழிப்பெயர்க்க திராவிட மாடல் முதலமைச்சர் அவர்கள் வழிவகுத்தார். அதனால், இன்று பெரியாருடைய பிறந்தநாளை மிகவும் ஜனரஞ்சகமாக, மக்களின் குரலாக, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்ட தொகுப்புகளை நாம் கண்டறிந்தோம். அறிஞர் அண்ணாவின் சமூக, அரசியல் கொள்கைதான் திராவிட முன்னேற்றக் கழகம். அடிப்படை கொள்கையான பகுத்தறிவு, மாநில உரிமை, சமூக நீதி, மதச்சார்பின்மைதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை.
இன்றைக்கு தமிழ்நாட்டின் அரசியல் கொள்கையாக மாறிய சூழ்நிலை அறிஞர்
அண்ணாவின் உழைப்பு. எனவே, நாடெங்கும் மாநில உரிமைகள் தளர்த்திட,
வளர்ந்திட, இனக் குழுக்கள் தங்கள் மொழியை பாதுகாத்திட
பல்வேறு மாநிலங்களில் சமூக அமைப்புகள் எடுத்துக்காட்டாக அமைய அறிஞர் அண்ணாவின் எழுத்துகள் பிற
மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டுமென்கிற கேள்வியை தங்கள் வாயிலாக அமைச்சர் அவர்களிடத்தில் கேட்டு அமர்கிறேன்.
அமைச்சர் மு.பெ. சாமி
நாதன்:ஏற்கெனவே உறுப்
பினர் அவர்களுடைய
வினாவிற் கான விடையைத் தந்திருக்கிறேன். முதலமைச்சர் அவர்கள் அதற்கு
அனுமதி வழங்கியிருக்கிறார்கள். அதேபோல, தந்தை பெரியாருடைய கருத்து
களையெல்லாம்
பிறமொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதையும் இங்கே குறிப்பிட் டிருக்கிறார்கள். அதேபோல, சட்டமேதை அண்ணல்
அம்பேத்கர் அவர்களின் நூல்களையெல்லாம் கூட தமிழில் மொழிபெயர்க்கக்கூடிய
நடவடிக்கைக்கும் முதல
மைச்சர் அவர்கள் உத்தரவிட்டு, அதற்கும் துறையின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உறுப்பினர் அவர்களின் கருத்துகள் எதுவாக இருந்தாலும் நிச்சயமாக முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்து சென்று, துறையின் சார்பிலே நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்
கிறேன்.
டாக்டர் நா. எழிலன்:Tony Blair Institute for Global Change என்ற ஒரு அமைப்பு ஆப்பிரிக்கா துணைக் கண்டத்தில் இனக்குழுக்காகப் பிரிந்த கீழ்நிலையிலுள்ள நாடுகளுக்கு எந்தவகையான அரசாட்சி முறை ஏதுவாக இருக்குமென்ற ஆய்வின் அடிப்படையில் பார்க்கும்போது, அவர்கள் பரிந்துரை செய்வது திராவிட மாடல் ஆட்சி முறைதான் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை உயர்த்தளிக்கும் என்ற
ஆய்வினை வெளிப்பாடு கொண்டு வந்தார்கள். அதன் தொடர்ச்சியாக, நாம் பல்வேறு தலைவர்களுக்கு பல்வேறு மரியாதைகள் செலுத்துகிறோம். அதேபோல், திராவிட மாடல் என்று சொல்லும்போது நம் தமிழ்நாடு வளர்ச்சிக்கான பல்வேறு சாதனைகள், அது காலை உணவுத் திட்டமாக இருக்கட்டும்; மதிய உணவுத் திட்டமாக இருக்கட்டும்; சத்துணவுத் திட்டமாக இருக் கட்டும்; நிலச்சீர்த்திருத்த மாக
இருக்கட்டும்; சமூக பொளாதார வளர்ச்சியாகட்டும்; சாதனைகளைக் காட்சிப்படுத்தி, தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த சாதனைகளை உணர
வைக்குமாறு அருங்காட்சியம் அமைக்கப்படுமா?
அமைச்சர் மு.பெ.சாமிநாதன்: நம்முடைய திராவிட மாடல் ஆட்சியினுடைய நாயகன் முதலமைச்சர் அவர்கள், திட்டங்கள் மக்களுக்கு பல்வேறு விதங்களில் எடுத்து சொல்லப்பட்டு வருகிறது. பத்திரிகை மூலமாக, ஒளி நாடாக்கள் மூலமாக, அரசு நிகழ்ச்சிகள் மூலமாக
இன்றைக்கு எடுத்து
சொல்லப்பட்டு வந்தாலும், உறுப்பினர் அவர்களின் கருத்தை பரிசீலிக்கும் வகையில் திட்டங்களைப் பற்றிய அருங்காட்சியகம் அமைப்பதற்கான நடவடிக்கை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, துறையின் சார்பில் பரிசீலிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
