எனது குடும்ப உறவினரின் நண்பர் குடும்பத்துடன் பெங்களூரிலிருந்து போடிநாயக்கனூர் வருவதற்காக வேளாங்கண்ணி சென்று விட்டு நாகப்பட்டினம்வழியாக வருகின்றபோது என் நண்பருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் அவரது துணைவியார் சேர்ந்திருக்கின்றார் அந்த ஊரில் அவர்களுக்கு யாரும் தெரியாது. உடன் எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நான் உடனே குணசேகரன் அவர்களிடம் தொடர்பு கொண்டேன் அவர் உடனடியாக நாகப்பட்டினம் நகரத் தலைவர் செந்தில்குமாரை தொடர்பு கொண்டு வேண்டிய உதவிகளை செய்து தரகேட்டுக் கொண்டார். அவரும் தன் வேலைகளை எல்லாம் ஒதுக்கி விட்டு நேராக அரசு மருத்துவமனை சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதுடன் மாலை நாத்திக. பொன்முடியை அழைத்து உடன்இருந்து உதவி செய்தார்கள்.
முகம் தெரியாத மனிதருக்கு மனித நேயத்துடன் தக்க சமயத்தில் உதவிகள் செய்த மனித நேயச் செயல்பாட்டை நன்றியுடன் பாராட்டி அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்தேன் குடும்பத்தாரும் நன்றி தெரிவித்தனர். தந்தை பெரியார் தொண்டர்கள் இப்படித்தான் செயல்படுவார்கள் என நினைத்து மகிழ்ந்தேன்.
– தேனி மாவட்ட காப்பாளர் ரகு நாகநாதன்
