அரியலூர், அக். 19- அரியலூர் மாவட்டம். செந்துறை வட்டம். நிண்ணியூர் சிற்றூரைச் சார்ந்த மறைந்த சாமிநாதனுடைய வாழ்விணையரும் இராசாத்தி, செந்துறை இராஜேந்திரன், இராஜாகோபால், இராதா, வழக்குரைஞர் பகுத்தறிவாளன், விஞ்ஞானி தங்கசாமி, மருந்தாளுநர் செந்தாமரை ஆகியோரின் தாயாருமான தையல்நாயகி அம்மையார் (வயது 86) (17.10.2025) நண்பகல் 12 மணி அளவில் மறைவுற்றார்.
அம்மையாரின் மறைவையொட்டி,(18.10.2025) அன்று பிற்பகல் 2.00 மணி அளவில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில். அரியலூர் மாவட்ட கழகத் தோழர்கள் அம்மையாரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நிண்ணியூர் கிராமத்தில் எவ்வித மூட சடங்குகளும் இல்லாமல் அம்மையாரின் உடலடக்க நிகழ்வு நடைபெற்றது.

இரங்கல் கூட்டத்திற்கு முன்பதாக, வழக்குரைஞர் பகுத்தறிவாளன் மற்றும் செந்துறை ராஜேந்திரன் ஆகியோரிடம் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கைப்பேசியில் பேசுகையில் தமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
கழக ஒருங்கிணைப் பாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில். பகுத்தறிவாளர் கழக ஊடகப் பிரிவு தலைவர். மா.அழகிரிசாமி, ச.அ.பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திமுக), காப்பாளர் சு. மணிவண்ணன். விடுதலை. நீலமேகன் மாவட்டத் தலைவர். மு.கோபாலகிருஷ்ணன் மாவட்டச் செயலாளர், இரத்தின. ராமச்சந்திரன் பொதுக்குழு உறுப்பினர். பொன்.செந்தில்குமார் மாவட்ட துணைச் செயலாளர். அரங்க. இளவரசன். வி.எழில்மாறன் ஒன்றிய செயலாளர் திமுக, செந்துறை மதியழகன், இராசா, செல்வகுமார் ஒன்றிய செயலாளர் சா.தங்கசாமி ஆகியோர் இரங்கலுரையாற்றினர்.
ஆ.இளவழகன் (மாவட்ட விவசாய அணி செயலாளர்), மு. முத்தமிழ்ச்செல்வன் (ஒன்றிய தலைவர்) லெ.தமிழரசன் (மாவட்ட இளைஞரணி தலைவர்), வி.ஜி.மணிகண்டன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), த.செந்தில் (அரியலூர் ஒன்றிய செயலாளர்), சி. கருப்புசாமி பழமலைநாதபுரம், த.வெங்கடேசன் ஆசிரியர், ஜி.கமலக்கண்ணன். சி.விஜய் விளாங்குடி, குழுழூர் சுப்பராயன் உள் ளிட்ட கழக தோழர்களும், உறவினர்களும் அம்மை யாரின் இறுதி நிகழ்வில் பங்கேற்றனர்.
தமிழர் தலைவர் அவர்கள் குடும்பத்தினரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார்.
