வெறும் பதவிக்காக இருக்கின்ற இயக்கமல்ல, இந்த இயக்கம்! மக்களின் உதவிக்கான, மக்களின் மான மீட்பு,
உரிமை மீட்பு இயக்கம்! பல நூற்றாண்டுகளை ஒரு நூற்றாண்டில் புரட்டிப் போட்ட இயக்கம்!
உரிமை மீட்பு இயக்கம்! பல நூற்றாண்டுகளை ஒரு நூற்றாண்டில் புரட்டிப் போட்ட இயக்கம்!
தமிழர்கள் மானம் பெறுகின்ற வரையில்
பல நூற்றாண்டுகள் உழைக்கவேண்டிய இயக்கம்!
பல நூற்றாண்டுகள் உழைக்கவேண்டிய இயக்கம்!
சென்னை, அக்.18 வெறும் பதவிக்காக இருக்கின்ற இயக்கமல்ல, இந்த இயக்கம். மக்களின் உதவிக்கான, மக்களின் மான மீட்பு, உரிமை மீட்பு இயக்கம். பல நூற்றாண்டுகளை ஒரு நூற்றாண்டில் புரட்டிப் போட்ட இயக்கம். தமிழர்கள் மானம் பெறுகின்ற வரையில் பல நூற்றாண்டுகள் உழைக்கவேண்டிய இயக்கம் – இந்த இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
- வெறும் பதவிக்காக இருக்கின்ற இயக்கமல்ல, இந்த இயக்கம்! மக்களின் உதவிக்கான, மக்களின் மான மீட்பு, உரிமை மீட்பு இயக்கம்! பல நூற்றாண்டுகளை ஒரு நூற்றாண்டில் புரட்டிப் போட்ட இயக்கம்!
- தமிழர்கள் மானம் பெறுகின்ற வரையில் பல நூற்றாண்டுகள் உழைக்கவேண்டிய இயக்கம்!
- சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
- அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை!
- சமூகநீதிக்கு முதலிடம்!
- ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்பதில்தான் எனக்குப் பெருமை என்றார் கலைஞர்!
- முட்டாள்தனத்தினுடைய முதுகெலும்பை முறிக்கின்ற இயக்கம்!
- அய்யா அவர்கள், சுலபத்தில் உணர்ச்சிவயப்பட மாட்டார்!
- ‘‘அந்த வசந்தம்!’’ என்ற தலைப்பில் அண்ணா எழுதிய கட்டுரை!
- தமிழர்கள் மானம் பெறுகின்ற வரையில்…
- பெரியார்மீது சாம்பல் வீச்சு!
- பெரியாரின் தாடியை வெண்ணிற தாடியாக ஆக்கியது எதிர்ப்பல்லவா?
- இன்றைக்கு உனக்கு வெளியே வர தைரியமில்லை!
- மனுதர்மம், அரசியலமைப்புச் சட்டத் தகுதியைப் பெறுவதற்கு உரியது அல்ல!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
கடந்த 4.10.2025 அன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் உள்ள ஆழ்வார் பேலஸ் மண்டபத்தில் நடைபெற்ற, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு – கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை!
WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:
மேற்சொன்ன அய்ந்து அம்சங்கள் – 1. இறை யாண்மை, 2. சமதர்மம், 3. மதச்சார்பின்மை, 4.ஜன நாயகம், 5.குடியரசு.
இவை எப்படி வந்தன?
சுயமரியாதை இயக்கத்தினுடைய விதைகளிலிருந்து, சமத்துவத்தினுடைய விதைகளிலிருந்து, ஜாதி ஒழிப்பிலிருந்து இந்த முளைகள் கிளம்பின.
சமூகநீதிக்கு முதலிடம்!
அதனால், அடுத்த வரியாகச் சொன்னார், நாங்கள் செய்வதில் சமூகநீதிக்கு முதலிடம்; பொருளாதா ரத்திற்கும் அதே இடம்; அதற்கடுத்து அரசியல்.
இவற்றை நேர் எதிராக, காலங்காலமாக மறுத்தது தானே மனுதர்மம்.
இளைய தலைமுறைத் தோழர்களே,
ஏன் பெரியார் கொதித்தார்?
ஏன், அண்ணா களத்தில் குதித்தார்?
ஏன் அழகிரிகள் ரத்தத்தைக் கக்கிக் கக்கி, இந்த நாட்டில், சுயமரியாதை இயக்கத்திற்காக தங்கள் வாழ்வை முடித்துக் கொண்டார்கள்?
‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்பதில்தான் எனக்குப் பெருமை என்றார் கலைஞர்!
ஏன், கலைஞர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகுகூட ‘‘மானமிகு சுயமரியாதைக்காரன்’’ என்பதில்தான் தனக்குப் பெருமை என்று சொன்னாரே, அந்தப் பெருமை என்ன?
அண்ணா அவர்கள் முதலமைச்சரானவுடன், ‘‘இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை’’ என்றாரே, ஏன்?
சுயமரியாதை இயக்கத்தின் நூறாண்டு காலத்தில் எத்தனைப் பரிமாணங்கள்? எத்தனை செயல்வீச்சுகள்? எத்தனை செயல் மாற்றங்கள்? என்பதையெல்லாம் எண்ணிப் பாருங்கள் நண்பர்களே!
முட்டாள்தனத்தினுடைய முதுகெலும்பை முறிக்கின்ற இயக்கம்!
இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். திராவிடம் இயக்கம் வெறும் ஜிகினா இயக்கமல்ல; வெறும் வானவில் இயக்கமல்ல; வெறும் சினிமா மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று முட்டாள்கள் தப்புக்கணக்குப் போடுகிறார்களே, அவர்களுடைய முட்டாள்தனத்தினுடைய முது கெலும்பை முறிக்கின்ற இயக்கம் இது.
உழைப்பு, ரத்தம், தியாகம், தேவைப்பட்டால் தங்களுடைய சொந்த மானத்தைக்கூட தியாகம் செய்துகொண்டு, இனமானத்திற்காகத் தன்மானத்தை விடு என்று சொல்லிக் கொண்டிருக்கின்ற ஆயி ரக்கணக்கான உழைக்கின்ற பட்டாளங்களை உரு வாக்குகின்ற ஒரு பட்டறை, ஒரு பாசறை இந்த இயக்கம்.
அய்யா அவர்கள், சுலபத்தில் உணர்ச்சிவயப்பட மாட்டார்!
தந்தை பெரியார் பிறந்த நாள் ‘விடுதலை’ மலருக்காக அண்ணாவிடம் ஒரு கட்டுரை கேட்டோம்; அவரும் ஒரு கட்டுரையை எழுதித் தருகிறார்.
அந்தக் கட்டுரையை அய்யாவிடம் படித்துக் காட்டுகிறேன். அதைக் கேட்ட அய்யா அவர்கள், அப்படியே நெகிழ்ந்து போகிறார். அய்யா அவர்கள், சுலபத்தில் உணர்ச்சிவயப்பட மாட்டார். அப்படிப்பட்ட அய்யா அவர்கள், அண்ணவின் கட்டுரையைப் படிக்கப் படிக்கக் கேட்கும்போது, கண்களில் கண்ணீர்தான் வரவில்லையே தவிர, அவருடைய உணர்வுகளை அருகிலிருந்த எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது.
‘‘கட்டுரையைப் படியுங்கள்’’ என்றார் தந்தை பெரியார்.
‘‘அந்த வசந்தம்!’’ என்ற தலைப்பில் அண்ணா எழுதிய கட்டுரை!
அண்ணா அவர்கள் எழுதிய அந்தக் கட்டுரையின் தலைப்பு ‘‘அந்த வசந்தம்!’’ என்பதுதான்.
அந்தக் கட்டுரையில் அண்ணா சொல்கிறார், ‘‘என்னுடைய வாழ்நாளில் வசந்தம் என்றால், அது தந்தை பெரியார் அவர்களோடு இருந்ததுதான்’’ என்று.
தமிழர்கள் மானம் பெறுகின்ற வரையில்…
தோழர்களே, வெறும் பதவிக்காக இருக்கின்ற இயக்கமல்ல, இந்த இயக்கம். மக்களின் உதவிக்கான, மக்களின் மான மீட்பு இயக்கம் இந்த இயக்கம். உரிமை மீட்பு இயக்கம், இந்த இயக்கம். பல நூற்றாண்டுகளை ஒரு நூற்றாண்டில் புரட்டிப் போட்ட இயக்கம். தமிழர்கள் மானம் பெறுகின்ற வரையில் பல நூற்றாண்டுகள் உழைக்கவேண்டிய இயக்கம் இந்த இயக்கம்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வேறுபாடுகள் இருந்தன என்று உங்களுக்கெல்லாம் தெரியாது.
கத்திபாரா பாலத்தின்மீது வசதியாகவும், வேகமாகவும் சுழன்று சுழன்று வருகிறோமே, இது இப்போது.
டி.ஆர்.பாலு அவர்களாலும், தி.மு.க. ஆட்சி யின்போதும் எடுக்கப்பட்ட முயற்சியால், கத்திப்பாராவில் மேம்பாலம் கட்டுவதற்கு முன்னால், அந்தப் பாதையில் பயணிப்பது எவ்வளவு சிரமம் என்பது, அன்றைக்கும் கார் ஓட்டிய, இன்றைக்கும் கார் ஓட்டியவர்களுக்குத்தான், கத்திப்பாரா மேம்பாலத்தின் பெருமையை உணர முடியும். அதுபோலத்தான், சமூக மாற்றங்கள்.
பெரியார்மீது சாம்பல் வீச்சு!
‘‘அந்த வசந்தம்’’ கட்டுரையில் அண்ணா எழுதுகிறார் கேளுங்கள், ‘‘பெரியாரோடு நான் சென்றிருக்கின்றேன். கூட்டத்தின்போது பலத்த எதிர்ப்புகள் வரும். கோவைக்குப் பக்கத்தில் உள்ள இருகூர் என்ற ஊரில், பெரியார் பேசிக் கொண்டிருக்கிறார். நான் முதலில் பேசிவிட்டு, மேடையில் அமர்ந்திருக்கின்றேன். அப்போது, மேடைக்கு எதிரே இருக்கின்ற ஒருவன், சாம்பலைத் தூக்கித் தூக்கி வீசுகிறான், பேசிக் கொண்டிருக்கும் பெரியார்மீது. எங்கள்மீதும் வந்து விழுகிறது அந்த சாம்பல்.
பெரியாரின் தாடியை வெண்ணிற தாடியாக ஆக்கியது எதிர்ப்பல்லவா?
அப்போது அண்ணா சொல்கிறார், ‘‘நல்லது, பெரியாருக்கு இன்னும் முழுமையாக தாடி நரைக்கவில்லை. அங்கொன்றும், இங்கொன்றும் கருப்பாகத்தான் இருக்கிறது. முழுமையாக அந்தத் தாடியை வெண்ணிற தாடியாக ஆக்கியது இந்த எதிர்ப்பல்லவா?’’ என்று கேட்டார்.
அப்படி வளர்த்த இயக்கம் அல்லவா, இந்த இயக்கம் தோழர்களே! இது என்ன செப்படி வித்தைகளால் ஆன இயக்கமா?
இன்றைக்கு உனக்கு வெளியே வர தைரியமில்லை!
நம்முடைய முதலமைச்சரைப் பார்த்து, ‘‘சீப் மினிஸ்டர் சார்’’ என்று நீ குரல் கொடுத்துவிட்டால், ஆட்சி மாறிவிடுமா? இன்றைக்கு உனக்கு வெளியே வர தைரியமில்லை. உன்னுடைய உரிமைகளைப்பற்றி நீதிமன்றம் தோலை உரிக்கிறது.
இப்படிப்பட்டவர்கள் எல்லாம், ‘திராவிட மாடல்’ ஆட்சிக்குச் சவால் விடுவதா?
இந்தக் கருப்புச் சட்டைக்காரர்களுடைய கடைசி சொட்டு ரத்தம் இருக்கின்ற வரையில், உங்கள் கனவு பலிக்காது.
இந்த அணி இருக்கின்ற வரை, அந்தப் பிணி மக்களை நெருங்காது.
மனுதர்மம், அரசியலமைப்புச் சட்டத் தகுதியைப் பெறுவதற்கு உரியது அல்ல!
மனுதர்மம், ஒருபோதும் தமிழ்நாட்டில் காலை வைக்க முடியாது. இது தீக்கிரையாக்க வேண்டிய ஒன்றே தவிர, அது அரசியலமைப்புச் சட்டத் தகுதியைப் பெறுவதற்கு உரியது அல்ல.
தமிழ்நாடு என்றைக்கும் பெரியார் மண்தான்!
உப்பையே உணவாகக் கொண்டு உட்கொள்ளச் சொன்னால், உங்கள் கதி என்னாகும்?
இளைஞர்களே, புலம்பெயர்ந்து போயிருக்கின்ற தமிழர்களே, அங்கே இருந்து, இங்கே இருந்து, அதிகமான அளவிற்குப் பணம் செலவழித்து டிக்கெட்டை வாங்கி சினிமாப் பார்க்கிறீர்கள், ரசிக்கிறீர்கள். கேளிக்கை தேவைதான். நடிப்பைப் பாராட்டுங்கள், எங்களுக்கு ஆட்சேபணையில்லை.
ஆனால், தயவு செய்து நீங்கள் சிந்திக்கவேண்டும். உப்பையே உணவாகக் கொள்ளும்போது, அந்த உணவை, அப்படி உண்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?
(தொடரும்)