85 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை நெகிழ்ச்சியுடன் நினைவூட்டினார் தமிழர் தலைவர் ஆசிரியர்.
மதுரையை அடுத்த வாடிப்பட்டியில் 28.1.1940 (அப்பொழுது அவ்வூர் கழகத் தலைவர் வாடிப்பட்டி சுப்பையா) 1001 அணா தந்தை பெரியாரிடம் வழங்கப்பட்டது.
‘பெரியார் பண முடிப்பு 1001 அணா’ என்ற வாசகம் அடங்கிய சிவப்பு வண்ணத்தில் உள்ள அந்தப் பையையும் விரித்துக் காட்டினார்.
தந்தை பெரியார் விட்டுச் சென்ற நிதியை மட்டுமல்ல; அந்த நிதி அடங்கிய பையையும் பாதுகாப்பாக வைத்திருந்த கழகத் தலைவரை முதலமைச்சர் வியந்து பாராட்டினார்.
‘நிதியையும், அதன் பையையும் பாதுகாப்பதோடு மட்டுமல்ல; தந்தை பெரியார்தம் கொள்கைகளையும் பாதுகாத்து வருபவர் ஆசிரியர்’ என்று முதலமைச்சர் முதல் அனைவரும் பாராட்டினர்.