திருச்சி, அக்.18- தொழில்நுட்ப கல்வி முக்கியத்துவம் பெறும் இன்றைய காலக்கட்டத்தில், திருச்சி பெரியார் நூற் றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், தஞ்சாவூர் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் தானியக்க நுட்ப பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மய்யமும் (CETAT) இணைந்து வழங்கும் ரோபோடிக்ஸ் பயிற்சி ஆண்டுதோறும் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது.
6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், அறிவியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத் துறையில் தங்களை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்தப் பயிற்சியில் 2024–2025 ஆம் கல்வியாண்டில் பங்கேற்று, மூன்றாம் நிலை வரை சிறப்பாகப் பயின்று, ரோபோ வடிவமைப்பு, சென்சார் தொழில்நுட்பம், ஆட்டோமேசன் அமைப்புகள், செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) போன்ற துறைகளில் அவர்கள் நடைமுறை அறிவைப் பெற்றனர்.
பயிற்சி முடிவில் நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் விழாவில் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர், மற்றும் மாணவர் சேர்க்கைப் பிரிவின் உதவி இயக்கு நர், முனைவர் டி.கிருஷ் ணகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினர்.
அவருடன் பள்ளி முதல்வர், முனைவர் .க.வனிதா, ரோபோடிக்ஸ் பயிற்சி ஆசிரியை திவ்யா, ஆசிரி யர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்களும் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்.இவ்விழாவில் மாணவர்கள் தாங் களே வடிவமைத்த ரோபோ மாதிரிகளை காட்சிப் படுத்தினர். அவர்களின் புதுமை சிந்தனை, தொழில்நுட்பத் திறன், ஆராய்ச்சி மனப் பாங்கு ஆகியவை அனைவராலும் பாராட்டப் பெற்றன. ஏறத்தாழ அய்நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற இப்பயிற்சி வகுப்பில், ஏழாம் வகுப்பு மாணவர்கள் எஸ்.லக்சனா, இசட்.முகமது ரியாஸ், ஜே.கிருத்திக், எட்டாம் வகுப்பு மாணவர்கள் கே.கமல கண்ணன், பி.சைந்தவி, ஜி.எஸ்.நீரஜா, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் எஸ்.அபினேஷ், எஸ்.தனுசிறீ, பி.கமலேஷ் கண்ணன், எம்.சுரேகா, பத்தாம் வகுப்பு மாணவர்கள் எஸ்.கோபிநாதன், எஸ்.எம்.முகமது ஹாரீஸ் அப்பாஸ், ஜி.பவித்ராசிறீ ஆகியோர் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பேராசிரியர்.முனைவர்.டி.கிருஷ்ணகுமார் தனது வாழ்த்துரையில் “புதிய தலைமுறை மாணவர்கள் தொழில்நுட்ப உலகில் தங்கள் இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் இத்தகைய பயிற்சிகள் அவசியம். ரோபோடிக்ஸ் போன்ற பயிற்சிகள் அவர்கள் கற்றலையும் சிந்த னையையும் விரிவாக்குகி ன்றன. மாணவர்கள் உற்சாகத்துடன் பங் கேற்று திறமையை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது பெருமை தரக் கூடியதாக இருக்கிறது.” என்றார்.
பள்ளி முதல்வர், முனைவர் .க.வனிதா தெரிவித்ததாவது, “எங்கள் மாணவர்கள் தங்களின் சுய திறனையும் சிந்தனையையும் தொழில்நுட்ப வழியில் வெளிப்படுத்துகிறார்கள். கல்விக்குப் பக்கபலமாக விளங்கும் இதுபோன்ற பயிற்சிகள் அவர்களின் வாழ்க்கைத் திறன்களை வளர்க்கின்றன.” என்றார்.
இந்நிகழ்வு மாணவர் களின் புதுமை சிந்தனை, குழு பண்பாடு மற்றும் நடைமுறை கற்றல் திறனை மேம்படுத்தியதாக ஆசிரியர்கள் தெரிவித் தனர்.இந்நிகழ்வு, மாணவர்களுக்கு தொழில்நுட்ப துறையில் தன்னம்பிக்கை, குழு முயற்சி மற்றும் புதுமை நோக்குடன் செயல்படும் மனப்பாங்கு ஆகியவற்றை உருவாக்கியது.