திருச்சி, அக்.18- திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில், 27.09.2025 அன்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் திருச்சி மாவட்டப் பள்ளிக் கல்வித் துறை ஆகியவை இணைந்து அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நடத்திய சைக்கிள் பந்தயத்தில், திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் பள்ளியின் 5ஆம் வகுப்பு மாணவி எம்.தன்யாசிறீ பங்கேற்று மாவட்ட அளவில் எட்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
சாதனை மாணவிக்குப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து மகிழ்ந்தனர்.
பெரியார் கல்வி நிறுவன மாணவி சைக்கிள் பந்தயத்தில் சாதனை

Leave a Comment