பீகாரில் பெண்களுக்கான சுயதொழில் திட்ட நிதி கள்ளச்சாராய விற்பனைக்குப் பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி யுள்ளது.
கடந்த வாரம், பீகார் அரசு சுமார் 70 ஆயிரம் கோடிகளை சுமார் ஏழு கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் தலா ரூ.10,000 வீதம் சுயதொழில் வாய்ப்புகளுக்காகச் செலுத்தியது.
முழு மதுவிலக்கு: பீகாரில் 2022 ஆம் ஆண்டு முதல் முழு மதுவிலக்கு அமலில் உள்ளதால், மாநிலம் முழுவதும் கள்ளச்சாராயம் பெருமளவில் விற்கப்படுகிறது.
அரசு வழங்கிய இந்த ரூ. 10,000 நிதியை பெண்கள் பலர் சுயதொழிலுக்குப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அண்டை மாநிலமான அசாமில் இருந்து கள்ளச்சாராயத்தை வாங்கிவந்து பீகாரில் விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது.
பீகார் காவல்துறையின் மதுவிலக்கு பிரிவு நடத்திய சோதனையில், அசாமில் இருந்து காட்டு வழியாக பீகாருக்குள் நுழைய முயன்ற 20 பெண்கள் பிடிபட்டனர். அவர்களிடம் சோதனை செய்தபோது, ஒவ்வொரு பெண்ணும் தலா 12 லிட்டர் மதிப்புள்ள கள்ளச்சாராயத்தைக் கடத்தி வந்தது அம்பலமானது.
அரசு, பெண்களின் பொருளா தார முன்னேற்றத்திற்காக வழங் கிய நிதி, மாநிலத்தின் முழு மதுவிலக்கு கொள்கைக்கு சவால் விடுக்கும் வகையில் கள்ளச்சாராய விற்பனைக்குப் பயன்படுவது பெரும் பேசுபொருளாகியுள்ளது.