டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா 23 வயதான ஜாதி வெறி மற்றும் மதவெறியை வெளிப்படையாகவே பேசும் பாகேஷ்வர் பாபா என்னும் தீரேந்திரனுக்கு பாத பூஜை செய்து வணங்கினார்.
த |
லைநகர் டில்லியில் பெரும்பான்மை எதிர்க்கட்சி களுக்கு வாக்களிக்கும் வாக்காளர்களை நீக்கி சூழ்ச்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்து மோடியின் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு முதலமைச்சராக தேர்ந்தெடு க்கப்பட்ட டில்லி முதலமைச்சர் ரேகா குப்தா ஒரு நிகழ்ச்சி யில் பேசும்போது, “பார்ப்பனர்கள்தான் நமக்கு அறிவொளி ஊட்டினார்கள். அறிவின் முதல் சுடர் பார்ப்பனர்களால் ஏற்றப்பட்டு அங்கிருந்து அனைத்து மக்களுக்கும் பகிரப்பட்டது” என்று கூறியதுடன், உலக அளவில் பார்ப்பனர்கள் சென்றதால்தான் கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்கள் நவீன மாற்றங்களைக் கண்டன என்றும், அவர்கள் சென்றிருக்காவிட்டால் இந்த நிறுவனங்கள் அடையாளம் இல்லாமல் போயிருக்கும் என்று பேசினார்.
உண்மையில், கூகிள், பெப்சி, மைக்ரோசாஃப்ட் போன்ற நவீன நிறுவனங்கள் அனைத்தும் மேலை நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் கடுமையான உழைப்பாலும், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளாலும் உருவானவை – என்பதுதான் உண்மை.
அறிவொளிக் காலம்
இந்தியாவில் உயர் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் பர்ப்பனர்கள் அளித்த பங்களிப்புகள் அனைத்தும், மேலை நாடுகளின் நவீன கல்வி முறையையும், அறிவியல் தத்துவங்களையும் பின்பற்றிய பின்னரே நடந்தவை.
இங்கு இவர்களுக்காக அமைக்கப்பட்ட குருகுலங்கள் அறிவுச் சுடரை ஏற்றுவதற்கு முன்பே, அய்ரோப்
பாவிலும் அமெரிக்காவிலும் தொழிற்புரட்சி, அறிவொளிக் காலம், மின்னணுவியல் புரட்சி ஆகியவை ஏற்பட்டு
விட்டன.
மேலும், இந்தியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று கூகிள், மைக்ரோசாஃப்ட் போன்ற நிறுவனங்களில் உயர் பதவிகளில் அமர்ந்தது, பார்ப்பனிய சித்தாந்தத்தின் வெற்றியல்ல; மாறாக தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் போராடி நிலைநாட்டிய கல்வி உரிமையின் (இடஒதுக்கீட்டின்) மூலம் பெற்ற நவீன ஆங்கிலக் கல்வியின் வெற்றிதான் – கல்வியை அனைவருக்கும் பரவலாக்கியதால்தான், இந்தியா உலக அரங்கில் திறமைகளைக் காட்ட முடிந்தது.
பார்ப்பனிய கண்டுபிடிப்பு
டில்லி முதலமைச்சர் கூறுவதுபோல, உலகின் நவீன மாற்றங்களுக்குப் பார்ப்பனர்களின் உலகப் பயணமே காரணம் என்றால், அதற்கு முன் அவர்கள் இந்தியாவில் கண்டுபிடித்தவை என்ன? இந்திய வரலாற்றில் அவர்களின் முதன்மைக் கண்டுபிடிப்புகள் என்று கருதப்படுபவை, சமூகத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லாமல், பிளவுபடுத்தும் கூறுகளாகவே அதிகம் இருந்தன.
ரேகா குப்தா குறிப்பிடும் “அறிவுச் சுடரை” ஏற்றியவர்கள், சமூகத்தின் பெரும்பகுதியினருக்குக் கல்வியையும் அறிவியலையும் மறுத்து, உருவாக்கிக் கொடுத்ததாகக் கருதப்படும் பட்டியலைப் பார்ப்போம்:
- சமஸ்கிருதம்: குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே உரித்தான மொழியாகவும், ஆன்மிக ஆதிக்க மொழியாகவும் நிலைநிறுத்தப்பட்டது.
- கடவுள்கள், இதிகாச புராணம், கட்டுக்கதைகள்: சமூகத்தில் பகுத்தறிவை மழுங்கடித்து, சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின் பெயரால் ஆதிக்கம் செலுத்தப் பயன்பட்டவை.
- ஜாதிகள், வர்ணாசிரம கோட்பாடு, ஸநாதனம்: இந்திய சமூகத்தை ஆயிரக்கணக்கான அடுக்குகளாகப் பிளவுபடுத்தி, உழைப்பைப் பிரித்து, ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் அறிவையும் முன்னேற்றத்தையும் தடுத்த அடிப்படை அமைப்பு.
- ஜோதிடப் புரட்டு, ஜாதகம், பஞ்சாங்கம்: அறிவியல் சிந்தனைக்கு எதிராகவும், தனிநபர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் சக்தியாகவும் கட்டமைக்கப்பட்டு, அச்சம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை உருவாக்கியவை.
- சடங்கு சம்பிரதாயம், பரிகாரங்கள், உண்டியல், தட்சணை: இவை மக்களின் உழைப்பையும் செல்வத்தையும் சுரண்டி, கோயில் மையப்படுத்திய பொருளாதார ஆதிக்கத் தைக் கட்டமைக்கப் பயன்பட்டவை.
- விபூதி, குங்குமம், சந்தனம், திரிசங்கு, மணி, சூடம், ஊதுபத்தி: அன்றாட வாழ்வில் மூடநம்பிக்கைகளையும், பக்திப் பிடிப்பையும் நிலைநிறுத்தப் பயன்படும் பொருட்கள்.
- கோமியம், சாணம் (பசுவின்): அறிவியல் பூர்வமான சுகாதாரக் கோட்பாடுகளுக்கு மாறாக, புனிதமாகக் கருதப்பட்டு பின்பற்ற ஊக்குவிக்கப்பட்டவை.
- விதவிதமான விழாக்கள், பண்டிகைகள், கடவுள் சிலைகள்: இவை அனைத்தும் ஜாதியப் பிரிவினையையும், சடங்கு ஆதிக்கத்தையும் நிலைநிறுத்தும் சமூக அமைப்பின் அங்கங்களாகின.
அறிவுப் பாதையும்
ஆதிக்கப் பாதையும்
ஆதிக்கப் பாதையும்
பார்ப்பனர்கள் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படும் இந்தப் பட்டியல், சமூகத்தை ஒற்றுமைப்படுத்தவோ, அறிவியல் முன்னேற்றத்திற்குக் கொண்டு செல்லவோ உதவவில்லை; மாறாக, ஆதிக்கம், சுரண்டல் மற்றும் பாகுபாட்டை நிறுவனமயமாக்கவே பயன்பட்டது. அறிவுப் புரட்சியை ஏற்படுத்தியிருக்க வேண்டிய ஆற்றல், சமூகப் பிளவுகளை ஆழப்படுத்துவதிலும், மனித உழைப்பைச் சுரண்டுவதிலும் செலவிடப்பட்டது.