-பெ. கலைவாணன் திருப்பத்தூர்
த |
ன் உடலில் ஒரு சிறு தொற்று காரணமாக மருத்துவமனைக்கு செல்கிறார் ஒரு பகுத்தறிஞர்.
அவர் தன் பிரச்சினையைச் சரிசெய்ய மருத்துவமனையில் தங்கியிருந்து போது,அவரை பரிசோதித்த மருத்துவர் மற்றும் செவிலியர் அனைவரும் ” பேஷன்ட் க்கு என்ன பிரச்சினை?, “பேஷன்ட்”க்கு இந்த மருந்தை கொடுக்கவும் என்று அவரை பார்த்து ‘பேஷண்ட்.. பேஷண்ட்..’ என்ற சொல்லை பயன்படுத்தி அடிக்கடி அழைத்துக் கொண்டே யிருந்தனர்.
‘நோயாளி’ என்று பொருள்படும் ‘பேஷண்ட்’ என்ற சொல் அவருக்கு ேவ றொரு எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது.
‘பேஷன்ட்’, ‘பேஷன்ட்’ என்று சொல்லு கிறார்கள். ஒருவரின் உடலில் ஓர் உறுப்பில் இயல்பு நிலையிலிருந்து ஒரு சிறு பிரச்சினை உருவாகியுள்ளது. அதற்கு மருத்துவ உதவி தேவை, அதனால் தான் மருத்துவமனைக்கு இங்கே வந்திருக்கிறார்கள்.
மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவ உதவி செய்யப்போகிறார்கள். அதனால் அவர் பயனடையப் போகிறார்.
அவரை ஏன் “மருத்துவப் பயனாளி” என்று சொல்லக்கூடாது. நோயாளி என்று ஏன் சொல்ல வேண்டும்? அவர் தன்னம்பிக்கையைத் தகர்க்கக் கூடாது. வளர்க்க வேண்டும். ஆகவே “நோயாளி” என்றச்சொல் தன்னபிக்கையை தாழ்த்துவது போல் உள்ளது. எனவே இங்கே வருபவர்கள் யாரையும் அப்படி அழைக்கக் கூடாது. இனி மருத்துவமனைக்கு மருத்துவ உதவிக்கு வருபவர்களை “மருத்துவ பயனாளர்” என்றே அழைக்க வேண்டும் என்று கருதினார். உடன் எழுதினார். அச்சேற்றினார்.
அவர் சொன்னால் சரிதான். ஏன்னென் றால்? தன் 95 வயதிலும் ஓயாமல், ஒரு நாளும் ஓய்வெடுக்காமல் இந்த சமூகம் ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமத்துவ சமூகமாக வாழ வழி வகை செய்ய, தனது வாழ்வின் இறுதி நாள் வரையிலும் ஓடிக்கொண்டே யிருந்த தந்தை பெரியார் மாமனிதனின் தொண்டரல்லவா அவர்!
அத்தகைய மனிதர் கொடுத்து விட்டு சென்ற பகுத்தறிவுத் தீபத்தை அவர்தம் கையிலேந்தி, மாரத்தான் ஓட்டப் பந்தய வீரரைப் போல தனது 11 வயதில் ஓட துவங்கிய ஓட்டம் இன்று வரை, ( நாம் தான் 92 வயது என்று கணக்கெடுத்து கொண்டிருக்கிறோம். அவர் அதை கணக்கில் வைப்பதில்லை) எவ்வித தங்கு தடையில்லாமல், எவ்வித தொய்வும் இல்லாமல், வீரியத்துடன், அதே வேகத்துடன் ஓடிக் கொண்டிருப்பவராயிற்றே! அவர் காணாத மருத்துவமனையா? செய்து கொள்ளாத அறுவை சிகிச்சைகளா? தன் னையே ‘அந்தச் சொல்’ கொஞ்சம் பாதிக்கிறது என்றால்… மற்றவர்களை ஊக்கமிழக்கச் செய்யாதா?
அந்த சமூக விஞ்ஞானி மருத்துவ
மனைக்குச் சென்றாலும், தன் உடலை பற்றி மட்டும் சிந்திக்காமல், சமூக மருத்துவராக சதா இந்த சமூகத்தைப் பற்றியே சிந்திப்பவரால் தான் இப்படி சிந்திக்க முடியும்.
“மருத்துவப் பயனாளர்” என்று தன் உடலுக்கு வரும் குறைபாடுகளையும் தன்னம் பிக்கையுடன் எதிர்கொள்ள செய்துள்ளது அவரது சிந்தனை!
தமிழர் தலைவர், கழகத்தலைவர், ஆசிரியர் அவர்களின் அறிவியல் பூர்வமான யோசனையை ஏற்று சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் இனி மருத்துவமனைகளில் “நோயாளிகள்” என்ற பெயர்ப்பலகையில் இருப்பதை நீக்கி” மருத்துவப் பயனாளர்” என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசின் ஆணையாக வெளியிட்டுள்ளது நமக்கும், அரசுக்கும் பெருமை சேர்க்கக் கூடியது. எதற்கும் முன்னுதாரணமாக இருக்கும் தமிழ்நாடு அரசின் இச் செயல் உலகத்திற்கு ஒரு வழி காட்டியாக அமைந்துள்ளது. இனி உலகம் முழுவதும் “Medical Beneficiaries”
என்ற சொல் எதிரொலிக்கப் போகிறது. தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை உலகம் தொழுதுகொண்டுள்ளது. அவர்தம் மாணவராய் ஆசிரியர் அவர்களின் சிந்தனையும் இனி உலகம் ஏற்கும்.
நோயுள்ளவர்களுக்கு முதல் மருந்தே தன்னம்பிக்கைதான். மருத்துவமனையில் கிடைக்கும் ஆறுதலான, தன்னம்பிக்கை யூட்டும் சொற்கள் அவரைப் பெரிதும் தைரியம் ெகாள்ளச் செய்கின்றன. மீண்டும் மீண்டும் ‘நோயாளி’ என்று ஒருவனை அழைப்பது அவரது தன்னம்பிக்கையை தகர்க்கச் செய்யும்.
மேலும், சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் குறிப்பிட்டுச் சொன்னார். தமிழர் தலைவரிடத்திலே, ‘‘நீங்கள் தீர்மானங்களை கொண்டு வந்து சமூகத்தில் பரப்புங்கள். அதை திராவிட முன்னேற்றக் கழகமானது, ஆட்சியைப் பயன்படுத்தி சட்டங்களாக, விதி முறைகளாக, நெறிமுறைகளாக வகுப்போம்” என்று உறுதி அளித்துக் குறிப்பிட்டார்.
திராவிடர் கழகம் சமூக நோய்க்கான மருந்தைக் கண்டுபிடித்து, மருத்துவத்தைச் சொல்லிக் கொடுத்து கொண்டே இருக்கும். அதை திராவிட மாடல் அரசு ஏற்று, செயல்படுத்தி இங்கே மானுட சமத்துவத்தை தாக்கும் ஸநாதன நோய்க் கிருமிகள் மனித சமூகத்தை அண்டாது பேணிக் காக்கும்.
இனி மருத்துவமனைகளில் நோயாளி களுக்கு பதில் “மருத்துவப் பயனாளர்” என்ற சொல்லைத்தான் பயன்படுத்த வேண்டும் அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு முதல மைச்சர் மானமிகு, மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், அந்த சொல்லை உருவாக்கித் தந்த தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கும் நம் நன்றிகளை உரித்தாக்கிக் கொள்வோம்.
வாழ்க தந்தை பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
வாழ்க மருத்துவப் பயனாளர்கள்!!