டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* ஆளுநருக்கு அதிகாரம் இல்லை: சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதா குறித்த ஆளுநரின் பரிந்து ரைகள் நிராகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு நீதிமன்றம் தடையை எதிர்த்து, அக்டோபர் 18இல் முழு அடைப்பு. ஆளும் காங்கிரஸ் ஆதரவு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிரதமர் மோடியின் மவுனம்: முக்கிய முடிவுகள் அமெரிக்காவுக்கு ஒப்படைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* சி.பி.அய். விசாரணை நினைத்த போதெல்லாம் கேட்க முடியாது: உத்தரபிரதேச சட்டமன்ற செயலக ஆட்சேர்ப்பு ‘முறைகேடுகள்’ குறித்து “சிபிஅய் விசாரணையை வழக்கமான விசயமாகவோ அல்லது ஒரு தரப்பினர் சில பேரார்வத்தை வெளிப் படுத்துவதாலோ அல்லது மாநில காவல்துறை மீது அகநிலை நம்பிக்கையின்மையைக் கொண்டிருப்ப தாலோ இயக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு.
தி இந்து:
* தெலுங்கானா உள்ளூராட்சி தேர்தலில் ஓபிசி ஒதுக்கீடு தடை: 42% ஆக உயர்த்திய அரசாணை மீது உச்சநீதிமன்றம் தடை நீக்கம் செய்ய மறுப்பு.
* 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு முதல் கட்டத்திற்கான முன் சோதனை நவம்பர் 10 முதல் 30 வரை நாடு முழுவதும் நடைபெறும் என்று இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அறிவிப்பு.
* பீகார் இந்தியா கூட்டணி தொகுதி உடன்பாடு எட்டப்பட்டது. விகாசில் இன்சான் கட்சிக்கு 15 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது; முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களுக்கான 48 வேட்பாளர்களின் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* குஜராத் பாஜக அமைச்சரவை, முதலமைச்சர் தவிர்த்து கூண்டோடு பதவி விலகல்; மக்களின் அதிருப்தி காரணமா?
தி டெலிகிராப்:
* பீஹார் தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் குமார் தான் முதலமைச்சரா என்பதை நான் முடிவு செய்ய முடியாது. இந்த தேர்தலில் எங்கள் கூட்டணி நிதிஷ் தலைமையில் போட்டியிடுகிறது என்பதை மட்டுமே என்னால் இப்போது சொல்ல முடியும். தேர்தலுக்கு பிறகு கூட்டணிக் கட்சி தலைவர்கள் கூடி பேசி அதை முடிவு செய்வார்கள் என்கிறார் அமித்ஷா.
– குடந்தை கருணா