அந்நாள் – இந்நாள்

நாட்டின் முதல் நிதிநிலை  அறிக்கையைச் சமர்ப்பித்த
தமிழர் ஆர்.கே.சண்முகம்

பிறந்தநாள் 17.10.1892

சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற, அரசியல் பொருளாதார மேதை சர் ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) அவர்களின் பிறந்தநாள் இன்று, அக்டோபர் 17. அவர் கோவையில் 1892 ஆம் ஆண்டு பிறந்தார். இந்திய அரசியலிலும், சமூகத்திலும், பொருளாதாரத்திலும் நீங்காப் பங்களிப்பைச் செலுத்தியவர்:

காந்தியாரின் பரிந்துரையின் பேரில், பிரதமர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில், காங்கிரஸ் கட்சியைச் சாராதவராக இருந்தபோதும், இந்தியாவின் முதல் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பெருமைக்குரிய தமிழர் ஆர்.கே. சண்முகம் (செட்டியார்). 1947 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாள், சுதந்திர இந்தியாவின் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தவர் இவரே. உலக வங்கி நிறுவப்பட்ட கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக உரையாற்றியவர். பிரிட்டனிடம் இருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய சுமார் 1,500 கோடி ரூபாய் இழப்பீட்டைப் பெறுவதில் முக்கியப் பங்காற்றினார்.

தந்தை பெரியாரும் ஆர்.கே.சண்முகம்

சண்முகம் (செட்டியார்) நீதிக்கட்சி, சுயராஜ்யக் கட்சி எனப் பல்வேறு காலகட்டங்களில் இயங்கியவர். தந்தை பெரியார் அவர்களுடன் அவருக்கு நெருங்கிய நட்பு இருந்தது. ஒரு முறை  காந்தியாரிடம் பேசியபோது, “நான் அரசியல் அரிச்சுவடியைத் தந்தை பெரியாரிடம்தான் பயின்றேன்” என்று குறிப்பிட்ட ஆர்.கே. சண்முகம் (செட்டியார்) பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்

ஈரோடு சுயமரியாதை மாநாடு:

1930 ஆம் ஆண்டு நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டாவது  ஈரோடு மாகாண சுயமரியாதை மாநாட்டில் சண்முகம் செட்டியார் வரவேற்புக் குழுவின் தலைவராக (வரவேற்பாளராகப் பொறுப்பேற்றுச் செயல்பட்டார். இது சுயமரியாதை இயக்கத்துடனான அவரது நெருங்கிய தொடர்புக்குச் சான்றாகும்.

‘செக்கு ஆட்டும் நபர்’ கார்ட்டூன்:

பிரிட்டீஸ் இந்தியா ஆட்சியில் ஒன்றிய சட்டசபையின் தலைவராக சண்முகம் செட்டியார் தேர்ந்தெடுக்கப்பட்டபோது பார்ப்பனர் அல்லாத ஒருவர் இவ்வளவு உயர்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்று விமர்சித்து, ‘ஆனந்தவிகடன்’ பத்திரிகை, சண்முகம் செட்டியாரை “செக்கு ஆட்டும் நபராக”ச் சித்தரித்து ஒரு கார்ட்டூனை வெளியிட்டது. இதர பங்களிப்புகள்:

  • கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், சென்னை கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரியில் உயர் படிப்பையும் முடித்தார்.
  • சென்னை மாகாண சட்ட மேலவை உறுப்பினர் ஒன்றிய சட்டசபை யின் (நாடாளுமன்றம்) துணைத் தலைவர் மற்றும் தலைவர் எனப் பல பொறுப்புகளை வகித்தவர்.
  • கோயம்புத்தூர் ஒரு பெரிய தொழில் நகரமாக உருவாவதற்கும், அங்குள்ள பஞ்சாலைகள் வளர்ச்சி அடைவதற்கும் இவரது பங்களிப்புகள் அளப்பரியன.
  • டில்லித் தமிழ்ச் சங்கம், லண்டன் தமிழ்ச் சங்கம் போன்ற அமைப்புகளைத் தோற்றுவித்தவர்களில் இவரும் ஒருவர்.

ஆர்.கே. சண்முகம் (செட்டியார்), சிறந்த பேச்சாளராகவும், வழக்குரைஞராகவும், பொருளாதார நிபுணராகவும், சமூகச் சிந்தனையாளராகவும் விளங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *