போக்குவரத்துக்கு வசதியாக மெட்ரோ ரயில் பணிகளுக்கு தடை மேயர் பிரியா அறிவிப்பு

சென்னை, அக்.16 சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மெட்ரோ ரயில் செயல்பட்டு வருகிறது. சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் வரையில் ஒரு வழித்தடமும், விம்கோ நகரில் இருந்து மீனம்பாக்கம் வரையில் மற்றொரு வழித்தடமும் செயல்பட்டு வருகிறது. இதில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, மாதவரம்- சோழிங்கநல்லூர் வரையிலும், கலங்கரை விளக்கம்- பூவிருந்தவல்லி வரையிலான வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நாளை முதல் மெட்ரோ ரயில் பணிகளுக்கு தடை விதிப்பதாக சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேயர் பிரியா கூறுகையில், சென்னையில் விழாக் கால கூட்ட நெரிசல் மற்றும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு நாளை முதல் மெட்ரோ பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. மழைக்காலம் முடிந்ததும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பணிகளை மேற்கொள்ள மெட்ரோ நிறுவனத்திற்கு அறிவுறுத்தினார்.

வீட்டில் கஞ்சா பதுக்கிய
த.வெ.க நிர்வாகி கைது

செங்குன்றம், அக்.16 செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுப்பாக்கம் அம்பேத்கர் நகர் சிறுங்காவூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக செங்குன்றம் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.  அதன்பேரில் காவல்துறையினர் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியபோது, அங்கு பதுக்கி வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக வீட்டின் உரி மையாளரான ஆட்டோ ஓட்டுநர் கண்ணன்(வயது 35) என்பவரை கைது செய்தனர்.  இவர், த.வெ.க. கட்சியில் சிறுங்காவூர் கிளை பொருளாளராக பதவி வகித்து வருகிறார். அவரிடம் கஞ்சாவை எங்கிருந்து வாங்கி வந்து, யாருக்கெல்லாம் விற்பனை செய்தார்? என விசாரணை நடக்கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *