பெங்களூர், அக். 16- கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் பெங்களூரு மாநகரில் அய்ம்பெரும் விழா மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா, சுயரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா, சுயமரியாதைச் சுடரொளி இளஞ்சியம் பாண்டியன் படத்திறப்பு, பெரியார் தொண்டறச் செம்மல் விருது வழங்கும் விழா எழுச்சியோடு மிகுந்த மகிழ்ச்சியோடு நடைபெற்றது.
12.10.2025 ஞாயிறு காலை 11 மணிக்கு பெங்களூரு தமிழ்ச் சங்கம் திருவள்ளுவர் பேரரங்கில் நடைபெற்றது.
முதல் நிகழ்வாக தமிழர் தம் எழுச்சியின் அடையாளமான கழகக் கொடியை சென்னை சோழிங்கநல்லூர் கழக மாவட்ட காப்பாளர் நீலாங்கரை இரா.தே.வீரபத்திரன் பலத்த கரவொலிக்கு இடையே ஏற்றினார்.
இரண்டாம் நிகழ்வாக திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், அறிவாசான் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருநாடக மாநில மேனாள் செயலாளர் பாண்டியனின் இணையர் இளஞ்சியம் அம்மையாரின் படத்தை திறந்து வைத்தார். அரங்கில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையணிவித்தார். தோழர்கள் அனைவரும் எழுந்து நின்று பலத்த கையொலி எழுப்பினர்.
கருநாடக மாநிலக் கழகத் துணைத் தலைவர்கள் பு.ர.கஜபதி, எழுச்சிப் பாவலர் சே.குணவேந்தன் நிகழ்வுக்கு முன்னிலை வகித்தனர்.
கருநாடக மாநிலத் தலைவர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மு.ஜானகிராமன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார். கழக செயலாளர் இரா.முல்லைகோ அனைவரையும் வரவேற்று நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஒன்றரை மணி பிரச்சார உரை நிகழ்த்தினார். அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
தந்தை பெரியார் அவர்கள் இதே தமிழ்ச் சங்கத்தில் இரண்டு முறை வருகை தந்து விழிப்புணர்வு சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு, மனித நேயம் மற்றும் சுயமரியாதையுடன் பகுத்தறிவு கருத்துகளை பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதேபோல மேனாள் கோலார் தங்க வயல் பகுதியில் பரப்புரையை மேற்கொண்டு, இன்றளவில் தொழிலாளர் முன்னேற்றம் குறித்த எழுச்சியை உருவாக்கினார்கள். இன்றைக்கு நாம் வெற்றி அனுபவித்து வரும் இடஓதுக்கீடு கொள்கை நிலை பெற பெரியாரின் இயக்கமே காரணம். நடந்து முடிந்த மறைமலைநகர் சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு மாநாட்டு அமைப்பு, வெற்றி போன்றவற்றை குறித்தும் இயக்கம் பெங்களூருவில் செயல்பட வேண்டிய முறைகள் ஆக்கப் பணிகள் குறித்து மிகுந்த கரவொலிக்கு இடைஇடையே பேசினார்.
இதனைத் தொடர்ந்து சோழிங்க நல்லூர் கழக மாவட்டக் காப்பாளரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் இரா.தே.வீரபத்திரன் அவர்களுக்கு அனைத்து விதமான சிறப்புகளையும் கவிஞர் செய்து சிறப்பித்தார்கள். இரா.தே.வீரபத்திரன் சிறப்பு செய்தமைக்கு நன்றியுரை நிகழ்த்தினார்.
ஆசியாவில் சிறந்த தமிழ்ச் சங்கம் என்ற விருது பெற காரணமான கோ.தாமோதரன், கருநாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் இராசன் தாய்த் தமிழ் அமைப்பு திருவள்ளுவர் சங்கத் தலவர் எஸ்.டி.குமார், தி.மு.கழக மாநில பொருளாளர் சி.தட்சிணாமூர்த்தி, பெரியார் பற்றாளர் தொழிலதிபர் து.நாராயணசிங், பணி நிறைவு பெற்ற குடிநீர் வடிகால் வாரிய மூத்த பொறியாளர் அ.கமலக்கண்ணன் உள்ளிட்டோருக்கு சிறப்பு செய்யப்பட்டு ஆன்றோர் பெருமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தனர்.
கவிஞர் கலி.பூங்குன்றனார் தலைமையில் “எல்லாமே பெரியார்” என்னும் தலைப்பில் கவியரங்கம் துவங்கியது. கவிஞர் மதலைமணி, எழுச்சிப் பாவலர் சே.குணவேந்தன், கவிஞர் அமுதபாண்டியன், நிமிர் இலக்கிய வட்ட தலைவர் பெரியார் பற்றாளருமான கவிஞர் கா.பாபுசசிதரன் ஆகியோர் சிறப்பான கருத்துகளை எடுத்துரைக்கும் கவிபாடி கையொலி பெற்றனர்.
அடுத்து ஓசூர் மாவட்டத் தலைவர் சு.வனவேந்தன் தனது மாமனார் பாண்டியன், இலஞ்சியம் அம்மாள் மூலம் கண்மணியை திருமணம் செய்து கொண்டமையால், திராவிடர் கழக உணர்வு பெற்று, நன்கு வளமான வாழ்வும், அரிய மக்கள் இயக்கமான திராவிடர் கழகம் கண்டது குறித்தும் எடுத்துரைத்தார்.
வடக்கு மண்டலச் செயலாளர் சி.வரதராசன் தனது அண்ணாமலை இணையர் மற்றும் வெண்மலர் கல்வி அறக்கட்டளை சார்பில் ‘பெரியார் உலகம்’ வளர்ச்சி நிதியாக ரூபாய் பத்தாயிரம் வழங்கினார்.
ரூபாய் இரண்டு லட்சம் பெரியார் உலகத்திற்கு இரண்டு திங்களுக்கு முன் தமிழர் தலைவரிடம் கழகத் தோழர்களுடன் பெரியார் திடலுக்கு வந்து நிதி வழங்கிய குடிநீர் வடிகால் வாரிய பணிநிறைவு பெற்ற அ.கமலக்கண்ணன் ஓர் ஆண்டு விடுதலை சந்தா ரூ.2 ஆயிரம் மேடையில் வழங்கினார்.
அதிராம்புரம், சாய்பாபா நகரில் முனைவர் ஆ.மதுசூதனபாபு தலைமையில் இயங்கும் லிட்டில் பிளவ்ர் உயர்நிலைப் பள்ளி சார்பில் ஓர் ஆண்டு விடுதலை நாளிதழ் சந்தா, உண்மை ஓர் ஆண்டு சந்தா, மாடர்ன் ரேசனலிஸ்ட் ஓர் ஆண்டு சந்தா தொகையாக ரூ.3500 காசோலையை வழங்கினார். இந்நிகழ்வில் ஓசூர் மாவட்டக் கழக நிர்வாகிகள் பெரும் அளவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிறைவாக பொதுக்குழு உறுப்பினர் இரா.இராசாராம் மற்றும் செயற்குழு உறுப்பினர் அமுதபாண்டியன் நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் கலந்து கொண்ட அனை வருக்கும் சுவைமிகு பிரியாணியுடன் கூடிய உணவு வழங்கப்பட்டது.
அதன்பின்னர் மார்த்தாண்டம் பேபி செபக்குமார் குழுவினர் இசையோடு கூடிய “எல்லாமே தந்திரம்” என்று மாபெரும் தந்திரக் காட்சிகள் நிறைந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வழக்குரைஞர்சே.குணவேந்தனால் செய்த முயற்சியால் நிகழ்த்தப்பட்டது. மேடையில் சிறப்பாக கழகத் தலைவர்கள் நிறைந்த பதாகைகளும் வெளியில் வரவேற்பு பதாகைகளும் நிறைந்து இருந்தன.
அய்ம்பெரும் விழாவினை மாநில துணைத் தலைவர் சே.குணவேந்தன், செயலாளர் இரா.முல்லைக்கோ, மாநில தலைவர் மு.சானகிராமன், தோழர் சகாயராஜ், முரளி மற்றும் பல தோழர்கள் முன்னின்று ஏற்பாடு செய்தனர்.
