சென்னை, அக்.15 அகில இந்திய ஹிந்து மகாசபாவின் தலைவராகத் தன்னைத்தானே ‘சிறீ’ என்று அழைத்துக் கொள்ளும் கந்தன் என்பவர், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோடம்பாக்கத்தில் உறவினர் வீட்டில் தங்கி வந்த 13 வயது பெற்றோரை இழந்த ஆதரவற்ற சிறுமி ஒருவரை, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு சொகுசு பங்களாவிற்கு அழைத்துச் சென்று கந்தன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமியைப் பாலியல் தொழிலில் தள்ள, கந்தன் (கோடம்பாக்கம் சிறீ) ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படுகிறது. கந்தனின் ஆலோசனையின்படி, சிறுமியின் உறவினர் (அத்தை) புத்தாடை வாங்கித் தருவதாகக் கூறி, சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடு பட வற்புறுத்தியுள்ளார். சிறுமி மறுத்து அங்கி ருந்து செல்ல முயன்றபோது இக்கொடூரம் நிகழ்ந்துள்ளது.
சிறுமியின் அத்தை, கந்தனின் ஆலோசனை யின் பேரில் சிறுமியை ரகசியமாக ஆடைகள் இல்லாமல் படமெடுத்து கந்தனுக்கு அனுப்பி யுள்ளார். இந்த காட்சிப் பதிவு ஆதாரத்தைக் கொண்டே அச்சிறுமியை மிரட்டி கந்தன் பாலி யல் வன்கொடுமை செய்துள்ளார்.
சிறுமி அளித்த புகாரின் பேரில், தியாகராயர் நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கந்தன் (கோடம்பாக்கம் சிறீ) மற்றும் அச்சிறுமியின் அத்தை ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். சிறுமியின் அத்தை கைப்பேசி யைக் காவல்துறையினர் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கந்தன் மீது ஏற்கெ னவே நில அபகரிப்பு, ஆட்கடத்தல், போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்தக் குற்றங்களுக்காக இவர் முன்னர் சிறை சென்று பிணையில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் மேலும் பல இந்து அமைப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் சிக்குவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.