திருவனந்தபுரம், அக்.15- சபரி மலையைத் தொடர்ந்து வைக்கம் மகாதேவர் கோவிலிலும் 31 பவுன் தங்கம் காணாமல் போனது அம்ப லமாகி உள்ளது.
சபரிமலை
சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதான முகப்பில் தங்க முலாம் பூசப்பட்ட துவார பாலகர் சிலை கவசங்கள் பதிக்கப்பட்டிருந்தது. இந்த கவசங்களை புதுப்பிக்கும் பெயரில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியே கொண்டு சென்றபோது சுமார் 100 பவுன் தங்கம் காணாமல் போனது தெரிய வந்தது..
இந்த விவகாரம் தற்போது வெளி யாகி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாதேவர் கோவில்
இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட மேலும் ஒருகோவிலில் தங்கம் அபகரிக்கப்பட்ட சம்பவம் வெளியாகி மேலும் ஒரு அதிர்வலையை ஏற்ப டுத்தி உள்ளது. அதன் விவரம் வரு மாறு:-
கேரளாவில் திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் சபரிமலை அய்யப்பன் கோவில் உள்பட 1500-க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. அவற்றில் ஒன்று கோட்டயம் மாவட்டம் வைக்கம் சிறீ மகாதேவர் கோவில். இந்தக் கோவிலில் சபரிமலையை போலவே காணிக்கையாக வரும் தங்கம், வெள்ளி உள்பட ஆபரணங்கள் இரும்பு பெட்டகங்க ளில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தணிக்கையில்…
இது தொடர்பான பதிவேட்டில் 3,247.900 கிராம் தங்கம் உள்ள தாக குறிப்பிடப் பட்டு இருந்த நிலையில், 2020-2021 தணிக்கை அறிக்கை கடந்த ஆண்டு கேரள உயர்நீதிமன்றத்தில் சமர்பிக்கப் பட்டது. அந்த அறிக்கையில், 2,992.070 கிராம் தங்கம் இருப்ப தாக கூறப்பட்டுள்ளது. அதாவது 255 கிராம் தங்கம் (31½ பவுன்) காணாமல் போயிருப்பது கண்ட றியப்பட்டது. இது தொடர்பாக தேவஸ்தானம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் தணிக்கையில் தெளிவு படுத்தப்பட்டுள்ளது.
சபரிமலை கோவிலில் தங்கத்தை அபகரித்தது தொடர்பாக விசாரணை நடந்து வரும் நிலையில், வைக்கம் மகாதேவர் கோவிலில் காணாமல் போன 31½ பவுன் தங்கம் குறித்தும், குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
கேரள அரசுக்கு நெருக்கடி
சபரிமலை விவகாரத்தில் உன்னிகிருஷ்ணன் போற்றி தலை மையில் தேவஸ்தான ஊழியர்கள் தங்கத்தை அபகரித்த நிலையில் மகாதேவர் கோவிலில் யாருடைய தலைமையில் மெகா மோசடி அரங்கேறியது என்பதும் அடுத்த கட்ட விசாரணையில் அம்பலமாகும் என தெரிகிறது.