சென்னை,அக்.14 தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழ்நாடு கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு சுழற்சிகளின் காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. அதன்படி, இதன் காரணமாக தமிழ்நாட்டில் அக்டோபர் 19-ஆம் தேதி (19.10.2025) வரை பரவலாக மிதமான மழையும், சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் தகுந்த முன்னெச் சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.