சென்னை, அக்.14 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
விடுதலைப் போராட்ட வீரர் – மொழிப்போர்த் தீரர் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் பெயரன், விடுதலைப் போராட்டத் தியாகிகள் கிருஷ்ணசாமி பாரதி, லட்சுமி பாரதி ஆகியோரின் மகன் என நாட்டுக்காக உழைத்த குடும்பத்தின் வழித்தோன்றலாகப் பிறந்து, 16 வயது மாணவராக விடுதலைப் போராட்டத்தில் தொடங்கி, மதுரை மாவட்ட ஆட்சியர், தலைவர் கலைஞரின் முதல் தனிச் செயலாளர் எனப் பரந்த பெருவாழ்வுக்குச் சொந்தக்காரரான அவரை வாழ்த்தி மகிழ்கிறேன்!
நாட்டுப்பற்றில் உறுதி, மக்கள் தொண்டில் நாட்டம், எளிமை என நானிலமும் போற்றும் நற்பண்புகளைக் கொண்ட லட்சுமி காந்தன் பாரதியின் வாழ்க்கையை, இன்றைய தலைமுறை தனக்கான பாடமாகக் கொள்ள வேண்டும்! இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.
முல்லைப் பெரியாறில் புதிய அணை
தொண்டு நிறுவன வழக்கு விசாரணை
தமிழ்நாடு, கேரள அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது
புதுடில்லி, அக்.14 முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டக் கோரி ‘சேவ் கேரளா பிரிகேட்’ என்ற தொண்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், கே.வினோத் சந்திரன் அமர்வில் நேற்று (13.10.2025) விசா ரணைக்கு வந்தது.
அப்போது தலைமை நீதிபதி அமர்விடம் மனுதாரர் தரப் பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் வி.கிரி வாதிடும் போது இது 130 ஆண்டுகள் பழமை யானது என்பதால், அணை யின் கீழ்ப்பகுதியில் வசிக்கும் சுமார் ஒரு கோடி மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்றார்.அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தற்போதுள்ளஅணையை பலப்படுத்துங்கள் என்று உத்தரவிடலாம். இருமாநிலங்கள் தொடர்புடையமுல்லை பெரியாறு அணையால் யாருக்கு என்ன பிரச்சினை என்பதை மனுதாரர் தெளிவாக தெரிவிக்கவில்லை. பழைய அணைக்கு பதிலாக புதிதாக அணை கட்டினால், தமிழ்நாடு அரசின் எதிர்பார்ப்பு எப் படி இருக்கும். புதிய அணை கட்டக் கோருவது தொடர்பாக ஒன்றிய அரசு. தமிழ்நாடு, கேரள அரசுகள், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பதில் அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசா ரணையை தள்ளிவைத்தனர்.