கருநாடக மாநில திராவிடர் கழகத்தின் சார்பில் மாநில தலைவர் மு.சானகிராமன், மாநில செயலாளர் இரா.முல்லைக்கோ இயக்க இதழ்களுக்கு சந்தா தொகை ரூ.5,500 கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனிடம் வழங்கினர். (பெங்களூரு, 12.10.2025)

கர்நாடக மாநிலத் திராவிடர் கழகம் நடத்திய அய்ம்பெரும்விழா தந்தை பெரியார் பிறந்தநாள் விழா, அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா, சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா, சுயமரியாதை சுடரொளி இளஞ்சியம் பாண்டியன் படத்திறப்பு நிகழ்ச்சி, பெரியார் தொண்டறச் செம்மல் விருது வழங்கும் ஆகிய அய்ம்பெரும் விழா மாநில திராவிடர் கழக தலைவர் மு.சானகிராமன் தலைமையில் 12.10.2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக துணைத்தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
