டெல் அவிவ், அக். 14- 2 ஆண்டுகளாக நீடித்த போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இஸ்ரேல்-காசா தரப்பில் சிறை வைக்கப்பட்டிருந்த பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். தொடர்ந்து இஸ்ரேல்-காசா அமைதி ஒப்பந்தம் எகிப்தில் கையெழுத்தானது.
இஸ்ரேல்-காசா
போர்
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குல் நடத்தி 1,200 பேரை கொன்றனர். 200-க்கும் மேற்பட்டவர்களை பணயக் கைதிகளாக பிடித்து சென்றனர். அக்.7ஆம் தேதி 2023ஆம் ஆண்டு நடந்த இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காசா மீது போர் அறிவித்தார். 2 ஆண்டுகளாக நீடித்த இந்த போரில் ‘காசாவை சேர்ந்த 67 ஆயிரம் போர் கொல்லப்பட்டனர்.
20 அம்ச அமைதி திட்டம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தாண்டு தொடக்கத்தில் பதவி யேற்றதை தொடர்ந்து இஸ்ரேல்-காசா போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டார். அதன்படி வெள்ளை மாளிகையில் கடந்த மாத இறுதியில் நடந்த பேச்சுவார்த்தையில் டிரம்ப் 20 அம்ச திட்டத்தை பரிந்துரைத்தார்.
இந்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் தரப்பில் நெதன்யாகுவும், ஹமாஸ் தரப்பினரும் ஏற்றுக்கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இருப்பினும் இதுகுறித்து விவாதிக்க மத்தியஸ்த நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த ஹமாஸ் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன்படி எகிப்து நாட்டின் ஷாம் அல்-ஷேக் நகரில் கடந்த வாரம் தொடங்கி பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.
இதில் இஸ்ரேல் தரப்பில் அந்த நாட்டின் அமைச்சர்கள், ஹமாஸ் அமைப்பினர் கலந்து கொள்ள அமெரிக்கா, எகிப்து, அய்க்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்த பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பினரிடையே போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக முதல் கட்ட ஒப்பந்தம் கையெழுத்தானது. அப்போது இருதரப்பினர் சார்பில் பணயக்கைதிகள் பரி மாற்றம் நடைபெறும் என உறுதி யளிக்கப்பட்டது.
பணயக் கைதிகள் விடுவிப்பு
ஹமாஸ் தரப்பில் இஸ்ரேல் பணயக்கைதிகளில் உயிருடன் உள்ள 20 பேரும் விடுவிக்கப் பட்டனர். செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட அவர்கள் பின்னர் இஸ்ரேல் படைகளால் தாயகம் அழைத்து செல்லப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் அவர்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இதற்கு ஈடாக, இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 1,968 கைதிகளை இஸ்ரேல் ராணுவம் விடுவித்தது.
அமைதி ஒப்பந்தம்
இந்த நிலையில் எகிப்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் டிரம்ப் அறிவித்த இஸ்ரேல்-காசா அமைதி ஒப்பந்தம் அதி காரப்பூர்வமாக கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையில், 20-க்கும் மேற்பட்ட உலகத்தலைவர்கள் ஆதரவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகரில் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி தலைமையில் நடைபெறும் காசா அமைதி மாநாட்டில் இந்த நிகழ்வு நடை பெற்றது.