வேலூர், அக். 13- வேலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 9.10.2025 அன்று மாலை 5.30 மணிக்கு வேலூர் புன்னகை மருத்துவமனையில் நடைபெற்றது
இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வி.இ.சிவக்குமார் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் உ.விஸ்வநாதன் முன்னிலை வகித்தார் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ந. தேன்மொழி தொடக்க உரையாற்றினார், மாவட்ட காப்பாளர் வி.சடகோபன் நோக்க உரையாற்றினார், இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் சிறப்புரை யாற்றினார்.
இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் சி.கலைமணி, மேனாள் மாவட்டச் செயலாளர் கு.இளங்கோவன், மாவட்ட துணைத் தலைவர் க.சிகாமணி, மாவட்ட துணைச் செயலாளர் மு.சீனிவாசன், மாநகரத் தலைவர் ந.சந்திரசேகரன், மாநகர செயலாளர் அ.மொ.வீரமணி, மாவட்ட மகளிர் அணி ச.ஈஸ்வரி, மாவட்ட ப.க அமைப்பாளர் மா.அழகிரி தாசன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் க.சையத் அலிம், வேலூர் மாநகர மேனாள் அமைப்பாளர் நெ.கி.சுப்பிரமணியன், காட்பாடி நகரத் தலைவர் பொ.தயாளன், குடியேற்றம் நகரத் தலைவர் சி.சாந்தகுமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் பி.யுவன் சங்கர் ராஜா, மாநகர இளைஞரணி தலைவர் பாண்டியன், இளைஞர் அணி க.யோகேஷ், ஆகியோர் கலந்து கொண்டனர்.கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன
பெரியார் பெருந்தொண்டர் மேனாள் வேலூர் மாவட்ட தலைவர் ஜெகதீசனின் வாழ்விணையர் ஜெ.மீரா, வேலூர் மேனாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் திமுக, தலைமை செயற்குழு உறுப்பினரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தந்தை பெரியார் சிலை நிறுவியருமான ந.சுப்பிரமணியன், கழகப் பற்றாளரும் ஆசிரியர் மீது பற்று கொண்ட வருமான சத்துவாச்சாரி எஸ்.எச்.ஜமான் ஆகியோரின் மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
22.10.2025 அன்று வேலூர் விஅய்டி கல்வி நிறுவனத்தில் கருத்துரை ஆற்ற வருகை தரவுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதென தீர்மானிக்கப்படுகிறது.
பெரியார் உலகத்திற்கு வேலூர் மாவட்ட கழகம் சார்பில் பெருமளவு நிதி திரட்டி ஆசிரியரிடம் வழங்குவதென தீர்மானிக்கப்படுகிறது
இக்கூட்டத்திற்கு முடிவாக வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் இ தமிழ் தரணி நன்றியுரை கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.