நாகர்கோவில், அக். 13- நாகர் கோவில் மாநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாடு வெற்றிவிழா! பெரியார் உலகத்திற்கு நிதியளிப்பு! இதுதான் ஆர்எஸ்எஸ் – பிஜேபிஆட்சி இதுதான் திராவிடம் -திராவிடமாடல்ஆட்சி பரப்புரைபொதுக்கூட்டத்தை 27.10.2025 அன்று நடந்த குமரி மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
12.10.2025 அன்று கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலை மையில் உற்சாகமாக நடைபெற்றது.
மாவட்டச்செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தொடக்கவுரை யாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் சிறப்புரையாற்றினார். காப்பாளர் ம.தயாளன், மாவட்ட துணைத்தலைவர் ச.நல்லபெருமாள், பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு, கிள்ளியூர் ஒன்றிய செயலாளர் டாக்டர் பி கலைச்செல்வன், மாவட்டதுணைச் செயலாளர்கள் எஸ்.அலெக்சாண்டர் சி.அய்சக்நியூட்டன், பொதுக்குழு உறுப்பினர் மு.இராசேகர், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ், கழக மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மஞ்சு குமார், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலா ளர் எஸ்.குமார தாஸ், தொழிற்சங்க செயலர் க.யுவான்ஸ் கோட்டாறு பகுதித் தலைவர் ச.ச.மணிமேகலை மற்றும் தோழர்கள் பா.சு.முத்துவைரவன், குமரிச்செல்வன், மு .இராஜன் ஆகியோர் உரையாற்றி னார்கள்.
அக்டோபர் 27 இல் நாகர்கோவில் மாநகரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாடு வெற்றிவிழா, பெரியார் உலகம் நிதியளிப்பு விழா,இதுதான் ஆர்.எஸ்.எஸ் பாஜக ஆட்சி, இதுதான் திராவிட மாடல் ஆட்சி விளக்க கூட்டத்தினை எழுச்சிகரமாக நடத்துவது, அந்த கூட்டத்தில் பங்கேற்க வரும் திராவிடர்கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நாகர்கோவில் ஒழுகினசேரியில் உற்சாக வரவேற்பு வழங்குவது, திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய கனவுத்திட்டமான பெரியார் உலகத்திற்கு குமரிமாவட்ட கழகச் சார்பாக ரூ.10 இலட்சம் நிதி திரட்டி தலைவரிடம் வழங்குவது போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.