வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் சீன வர்த்தக துறை அதிகாரி பகிரங்க குற்றச்சாட்டு

பெய்ஜிங், அக்.13- சீன பொருட்களுக்கு அமெரிக்க அரசு தற்போது 30 சதவீத வரியை விதித்து வருகிறது. இந்த சூழலில் அரிய வகை தனிமங்களை வழங்க சீனா மறுப்பதால் அந்த நாட்டின் பொருட்களுக்கு நவம்பர் 1ஆம் தேதி முதல் கூடுதலாக 100 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சீன வர்த்தக துறையின் மூத்த அதிகாரி ஒருவர் பெய்ஜிங்கில் நேற்று (12.10.2025) செய்தியாளர்களிடம் கூறியதாவது: சீனாவின் செமி கண்டக்டர், சிப் உட்பட சுமார் 3,000 வகையான பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. சீனாவை பொறுத்தவரை சுமார் 900 பொருட்களுக்கு மட்டுமே தடை விதித்து இருக்கிறோம். அமெரிக்காவின் நடவடிக்கைகளால் சீன நிறுவனங்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டு உள்ளன. தற்போது வரி விதிப்பு மூலம் அமெரிக்கா மிரட்டல் விடுத்து வருகிறது. நாங்கள் எதற்கும் அஞ்ச மாட்டோம். வர்த்தக போரை சீனா விரும்பவில்லை. அமெரிக்க அரசு தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் சீனாவை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம். வரிவிதிப்பு விவகாரத்தில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. இதேபோல வணிக கப்பல் போக்குவரத்தில் அமெரிக்கா தொடர்ந்து ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு சீன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

செஷெல்ஸ் நாட்டில் அதிபர் தேர்தல்:  எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி வெற்றி

விக்டோரியா, அக்.13-   கிழக்கு ஆப்பிரிக்க நாடான செஷெல்சில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவில் அதிகபட்சமாக அதிபர் வேவல் ராம்கலவன் 46.4 சதவீத வாக்குகளையும், எதிர்க்கட்சி தலைவரான பேட்ரிக் ஹெர்மினி 48.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தனர். ஆனால் பெரும்பான்மைக்கு 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். எனவே இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பில் அதிபர் வேவல் ராம்கலவனும், பிரதான எதிர்க்கட்சியான ஹெர்மினி அய்க்கிய செஷெல்ஸ் சார்பில் பேட்ரிக் ஹெர்மினியும் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று (12.10.2025) வெளியானது. இதில் எதிர்க்கட்சி தலைவர் பேட்ரிக் ஹெர்மினி 52.70 சதவீத வாக்குகளை பெற்று அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

டிரம்பின் அதிகபட்ச வரி விதிப்பால்

அமெரிக்காவில் விலைவாசி உயர்வு

வாஷிங்டன், அக்.13- கடந்த மாதம் அய்.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “அமெரிக்காவில் மளிகை பொருட் கள் விலை குறைந்துள்ளது. அடமான விகிதம் குறைந்துள்ளது. மொத்தத்தில், விலைவாசி உயர்வு முறியடிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். ஆனால், உண்மையில் அமெரிக்காவில் விலைவாசி அதிக ரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக் கின்றன. விலைவாசி உயர்வு, தங்களுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துகிறது என்று ஏராளமான அமெரிக்கர்கள் தெரிவிப்பதாக கருத்து கணிப் புகள் கூறுகின்றன.

இருப்பினும், 3 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 9.1 சதவீத பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில், தற்போது குறைவாகவே உள்ளது. அதேசமயத்தில், அமெரிக்கரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கான 2 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது. ரிசர்வ் வங்கி வட்டி குறைப்பை அறிவித்தும் பணவீக்கம் கட்டுப் பாட்டில் வரவில்லை. கடந்த 4 மாத காலத்தை பார்த்தால், 3 மாதங்களில் பண வீக்கம் அதிகமாகத்தான் இருந்துள்ளது. கடந்த ஆண்டில் இருந்ததை விட சற்று அதிகமாக இருக்கிறது. டிரம்பின் அதிகபட்ச வரிவிதிப்பால், பர்னிச்சர், வீட்டு உபயோக பொருட்கள், பொம்மைகள் ஆகிய இறக்குமதி பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அன்றாட பயன் பாட்டு பொருட்கள், மளிகை பொருட்கள் ஆகியவற்றின் விலையும் 2 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *