சென்னை, அக்.13- அக்டோபர் மாதம் தொடங்கி ஒரு வாரம் மேலாகி விட்டது. இந்த மாதத்தில் மாநில அரசில் வேலைவாய்ப்புகள் வெளியிடப்
பட்டுள்ளது.
தமிழ்நாடு Rights திட்ட வேலைவாய்ப்பு 2025
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு Rights திட்டத்தில் உள்ள 1,096 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டதாரிகள் வரை விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் https://tnrightsjobs.tnmhr.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 14.10.2025 (நாளை)
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தொழிற்பயிற்சி 2025
தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தில் 1,588 இடங்கள் மற்றும் தமிழ்நாடு மோட்டார் வாகன பாரமரிப்பு துறையில் 79 இடங்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படுகிறது. பொறியியல் பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் இதர பட்டப்படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். 1 வருடம் தொழிற்பயிற்சி வழங்கப்படும்.
https://nats.education.gov.in/ என்ற இணையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்திற்கு – 18.10.2025 மற்றும் மோட்டார் வாகன பாரமரிப்பு துறைக்கு – 16.10.2025
டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வு 2025
டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்படும் தேர்வுகளில் இந்தாண்டுக்கான இறுதி தேர்வாக குரூப் 5ஏ அறிவிப்பு அக்டோபர் 7ஆம் தேதி வெளி வந்தது. தலைமைச் செயலகத் துறைகளில் உள்ள உதவி பிரிவு அலுவலர் பதவி இத்தேர்வின் நிரப்பப்படுகிறது. தமிழ்நாடு அமைச்சு பணியில் இருப்பவர்கள் பணி மாறுதலுக்கான தேர்வாக நடத்தப்படுகிறது.
அறிவிப்பு வெளியானது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை தெரியவரும். இதற்கான தேர்வு டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறும்.
https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.