சபரிமலை அய்யப்பன் சக்தி அம்பலம் ! தங்கம் மாயமான விவகாரம் பத்து பேர் கைதாக வாய்ப்பு

3 Min Read

திருவனந்தபுரம், அக். 13- சபரிமலையில் தங்கம் காணாமல் போன விவகாரத்தில் தேவஸ் தான அதிகாரிகள் கூட்டு கொள்ளையில் ஈடு பட்டது அம்பலமாகி உள்ளது. 10 பேரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தங்கம் மாயம்

சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் உள்ள துவார பாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட கவசங்களில் தங்கம் குறைந்த விவ காரம் கேரளாவில் பெரும் அதிர்வலையை ஏற் படுத்தியுள்ளது.

தங்க கவசம் செப் பனிடப்பட்டு மீண்டும் சபரிமலைக்கு வந்த பிறகு 986 கிராம் தங்கம் குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரம் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது.

தங்க தகடுகளை புதுப்பிக்க இடைத்தரகராக செயல்பட்ட உன்னி கிருஷ்ணன் போற்றி மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தான அதிகாரிகள் 9 பேர் உள்பட 10 பேர் மீது கேரள குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்துள்ளனர்.

10 பேர் கைதாக வாய்ப்பு

2019ஆம் ஆண்டு சபரிமலை நிர்வாக அதிகாரியாக இருந்த முராரி பாபு, செயல் அதிகாரி சுதீஷ்குமார், செயலாளர் ஜெயசிறீ, உதவி பொறியாளர் சுனில் குமார், தேவஸ்தான நிர்வாக அதிகாரி சிறீகுமார், திருவாபரண ஆணையர்களான பைஜு, ராதாகிருஷ்ணன் மற்றும் இந்த கவசங்கள் சபரிமலைக்கு திருப்பி கொண்டு வந்தபோது செயல் அதிகாரியாக இருந்த ராஜேந்திர பிரசாத், நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. தேவஸ்தான அதிகாரி களே இந்த கூட்டு கொள் ளையில் ஈடுபட்டது அம் பலமாகி உள்ளது.

கொள்ளை, நம்பிக்கை துரோகம், கூட்டு சதி ஆகிய ஜாமீன் கிடைக்காத பிரிவுகளின் கீழ் 2 பிரிவு களாக வழக்குகள் பதி யப்பட்டு உள்ளது. விரைவில் இவர்கள் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த வழக்கு சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரியான காவல்துறை கூடுதல் இயக்குநர் வெங்கடேஷ் தலைமையிலான குழுவிடம் ஒப்படைக்கப் படும். இதுதொடர்பாக கோவில் வாசல் நிலைக்கு தங்கம் வழங் கிய கர்நாடகாவை சேர்ந்த தொழில் அதி பர் கோவர்தனின் வாக்கு மூலத்தை பெற சிறப்பு விசாரணை குழுவினர் முடிவு செய்து உள்ளனர்.

இதற்கிடையே இந்த வழக்கில், சபரிமலை மூத்த தந்திரி கண்டரரு ராஜீவரருவை சேர்க்க கூட்டு சதி நடந்ததும் தெரிய வந்துள்ளது. சபரிமலை தங்கம் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மேலும், இந்த விவ காரத்தில் விரிவான விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க கேரள உயர் நீதிமன்றம் உத்தர விட்ட அறிக்கையின் அடிப் படையில், துவாரபாலகர் சிலைகளின் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் அப்போதைய வாரிய உறுப்பினர்களுக்குத் தெரியாமல் சென்னைக்கு முலாம் பூசுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று கூறியுள்ளது.

இந்ததகடுகள் சென் னையில் உள்ள ஸ்மார்ட் கிரியேஷன்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டு 49 நாட்களுக்கு பிறகு கொண்டு வரப் பட்டுள்ளது. அதிகாரிகள் தாங்களாகவே இந்தச் செயலைச் செய்திருக்க வாய்ப்பில்லை. வாரிய உறுப்பினர்களின் அழுத்தம் அல்லது வழி காட்டுதல் இருந்ததா? என்பது குறித்து விசா ரிக்கப்பட்ட வேண்டும் என அறிக்கை கூறுகிறது. மேலும் 2019ஆம் ஆண்டு வாரியத்தின் மீது அறிக்கை கடுமையான குற்றச் சாட்டை முன் வைத்துள்ளது.

இதுதொடர்பாக 2019ஆம் ஆண்டு திருவிதாங்கூர் தேவஸ்தான வாரியத் தலைவராக பணியாற்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பத்மகுமார், இந்த விவகாரத்தில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *