லக்னோ,அக்.12- ஆப்கானிஸ் தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தபோது, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் அரசியல் களத்தை உலுக்கிய சம்பவம், உத்தரப் பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத்தின் கடும் எச்சரிக்கைதான். “தலிபானை ஆதரிப்பவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்” என்று அவர் மறைமுகமாகக் கூறிய வார்த்தைகள், உள்நாட்டு தலிபான் ஆதரவாளர்களுக்கு விடுக்கப்பட்ட மிகக் கடுமையான அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டது.
இந்த எச்சரிக்கையை மீறி, சமாஜ்வாடி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஃபிகுர் ரஹ்மான் பர்க் மற்றும் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர்கள் தலிபானுக்கு ஆதரவாகப் பேசவே, உ.பி. அரசு சஃபிகுர் ரஹ்மான் பர்க் தேசத்துரோக வழக்குப்பதிவு செய்தது.
இந்த நிலைப்பாடு, தேசப் பாதுகாப்பு மற்றும் தீவிரவாத எதிர்ப்பு குறித்த அவரது கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.
ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் மவுலவி அமீர் கான் முத்தாக்கி, ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் பயணம் செய்த இடங்களில், மிக முக்கியமாக யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரப் பிரதேச மாநிலமும் அடங்கும். மேலும், சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற இஸ்லாமிய மத கல்வி மய்யமான தாருல் உலூம் தியோபந்த் மய்யத்திற்கு அவர் சென்றுள்ளார்.
அவருக்கு உத்தரப் பிரதேச அரசு முழுமையான பாதுகாப்பு மற்றும் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.
பாஜகவின் தலைவர்கள் கொள்கைகளை, தேசிய நலன் என்ற பெயரில், எவ்வளவு எளிதாக மாற்றிக் கொள்கிறார்கள் ஆனால் இதுதெரியாமல் பாஜக தொண்டர்களும் இதர ஹிந்துத்துவ அமைப்பினரும் வன்முறையில் இறங்கி சிறை பிணை வழக்கு என்று வாழ்க்கையை தொலைத்து நிற்கின்றனர்.
பிஜேபியின் இரட்டை வேடம் அன்று தலிபான் எதிர்ப்பு – இன்று தலிபான் அமைச்சர் வரவேற்பா?

Leave a Comment