புதுடில்லி, அக். 12-
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, தலிபான் அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர்கான் முத்தாகி அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்த பிறகு, பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவின் பல்வேறு செய்தி நிறுவனங்களின் ஊடக வியலாளர்கள் அனுமதிக்கப் பட்ட போதிலும், பெண் ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படாமல் வெளி யேற்றப்பட்டனர்
ஆப்கானிஸ்தானில் பெண் களுக்கு எதிராக தலிபான் அரசு பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்தியாவின் தலைநகர் டில்லியில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பெண் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மாண்பை பலிகொடுப்பதாகக் கூறி, இந்தச் செயலுக்குப் பல்வேறு பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஆசிய நாடுகளில் இந்தியா மட்டுமே முழுமையான ஜனநாயக நாடாக உள்ளது. இந்த நிலையில் 11 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மோடி தலைமையிலான பாஜக அரசு ஜனநாயக மாண்புகளுக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளையும் செய்துவருகிறது என்பதற்கு பெண் ஊடகவியலாளர்களை அனுமதிக்காததும் ஓர் எடுத்துக்காட்டு ஆகும். ஒரு வேளை ஜெய்சங்கர் இடத்தில் நிர்மலா சீதாராமன் இருந்தால் அவரையும் வெளியே நிறுத்தி இருப்பார்களா?
ஆப்கானிஸ்தானில் ஆறாம் வகுப்புக்கு மேல் பெண்கள் பள்ளிகளில் படிக்கக் கூடாது. உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பெண்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பணிபுரியும் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசுத் துறைகளில் பெண்கள் வேலை செய்யக் கூடாது. பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பெண்கள் பணி செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது, தலை முதல் கால் வரை உடலை முழுமையாக மூடிய (பொதுவாக பர்கா எனப்படும்) அங்கி அணிய வேண்டும். பெண்கள் அதிகம் இருக்கும் வீடுகளில் ஜன்னல்கள் கட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது அல்லது அவற்றை மறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆண்கள் துணை இல்லாமல் பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது. தனியாக டாக்சியிலோ அல்லது பொதுப் போக்குவரத்திலோ பயணம் செய்ய முடியாது.
பெண்கள் சத்தமாகப் பேசக் கூடாது. பெண்கள் பாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குதிகால் காலணிகள் (High-heels) அணியக் கூடாது, ஏனெனில் நடக்கும்போது எழும் சத்தம் ஆண்களின் கவனத்தை ஈர்க்குமாம்.
சுகாதாரம் மற்றும்
நீதி மறுப்பு:
மருத்துவ சிகிச்சை: பெண்களுக்கு சிகிச்சை அளிக்க பெண் மருத்துவர்கள் இல்லாத சூழலில், ஆண் மருத்துவர்களை அணுகுவதும் தடை செய்யப்பட்டுள்ளது பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குற்ற
மாக்கும் சட்டங்கள் நீக்கப்பட் டுள்ளன.
தலிபான் பெண்களுக்கு நீதி மற்றும் குறை தீர்க்கும் வழிகளை மறுக்கிறது. இந்த நடவடிக்கைகள் பன்னாட்டு அளவில் “பாலினப் பாகுப்பாடு’’ என்று கடுமையாகக் கண்டிக்கப்படுகின்றன.
ஆனால் இந்திய அரசு தாலிபான்களை அழைத்து அவர்களோடு குலாவிக்கொண்டு இருக்கிறது.