அரியலூரில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பெரியார் உலகநிதி அளிப்பு விழா

அரியலூர், அக். 12- அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் அவசர கலந்துரையாடல் கூட்டம் அரியலூர் சிறீராமஜெயம் லக்ஸ் அரங்கத்தில் 8.10.2025 புதன்கிழமை மாலை 6 மணியளவில் கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சிறப்புகளையும் இந்த இயக்கத் திற்கு கழகத் தலைவர் பெற்று கொடுத்திருக்க நற்பெயரையும் முதல மைச்சர் நம் இயக்க தோழர்கள் மீதும் தொண்டர்கள் மீதும் கொண்டிருக்கின்ற மரியாதை ஆகியவற்றை எடுத்துக் கூறி தமிழர் தலைவர் காலத்திலேயே “பெரியார் உலகத்தை” முடித்துக் காட்ட வேண்டியது நமது கடமை என்றும் கூறி சிறப்புரையாற்றினார்

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ் ணன் வரவேற்புரையாற்றினார்.  பொதுக்குழு உறுப்பினர் ரத்தின ராமச்சந்திரன், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் மு.ஜெயராஜ், செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத்தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர் ராசா.செல்வகுமார், தா.பழூர்ஒன்றிய செயலாளர் பி.வெங்கடாசலம், திருமானூர் ஒன்றிய தலைவர் க. சிற்றரசு, கீழப்பழுவூர் அன்பரசன் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், மாவட்டத் துணைச் செயலாளர் க.கார்த்திக், மாவட்ட இளைஞரணி தலைவர் லெ. தமிழரசன், மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் வெஇளவரசன், செந்துறை மதியழகன் ,சோ.க. சேகர் ,சி.கருப்புசாமி பொன்பரப்பி சுந்தரவடிவேல், தஞ்சை டேவிட், மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன், மாநில ப.க அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி ,தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் உரையாற்றி பெரியார் உலகத்திற்கு நிதியினை அறிவித்தனர்.

தீர்மானங்கள்

பெரியாரை உலகமயமாக்கும் நோக்கில் திருச்சி சிறுகனூரில் ரூபாய் 100 கோடி செலவில் அமைய உள்ள பெரியார் உலகப் பணிகளுக்கு பெரு நிதியை திரட்டி எதிர்வரும் அக்டோபர் 15ஆம் தேதி அரியலூருக்கு வருகை தரும் தமிழர் தலைவரிடம் அளிப்பதென தீர்மானிக்கப்படுகிறது

அரியலூருக்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதெனவும் முடிவு செய்யப்படுகிறது.

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டினை மிகுந்த சிறப்போடும் எழுச்சியோடும் நடத்தி கழகத் தோழர்களுக்கு புத்துணர்வையும் ஊக்கத்தையும் அளித்திட்ட தமிழர் தலைவர் அவர்களுக்கும் ,திராவிடர் கழக தோழர்களின் தொண்டறத்தை பாராட்டியும், திமுக சார்பாக பெருமளவில் நிதியளித்தும் ஊக்கு வித்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் இக்கூட்டம் மிகுந்த நன்றியினையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

நிதி வசூல் குழு

அரியலூர் மாவட்ட பொறுப் பாளர்கள் ஒருங்கிணைப்பாளர்கள்

க.சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), விடுதலை.நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), தலைவர் – தங்கசிவமூர்த்தி (மாநில ப.க அமைப்பாளர்) குழு செயலாளர் – இரத்தின. ராமச்சந்திரன் (பொதுக்குழு உறுப்பினர்) பொருளாளர் – தியாக.முருகன் (ஆண்டிமடம் ஒன்றிய தலைவர்) குழுத்துணை தலைவர்கள் – இரா திலீபன் (‘மாவட்ட துணை தலைவர்), பொன்.செந்தில்குமார் (மாவட்ட துணைச்செயலாளர்)

துணை செயலாளர்கள் – ராஜா.அசோகன் (பொதுக்குழு உறுப்பினர்), க.கார்த்திகேயன் (மாவட்ட துணைச் செயலாளர்) உறுப்பினர்கள் – காப்பாளர்கள் சி.காமராஜ் சு மணிவண்ணன் மற்றும் சு.அறிவன் (மாநில இ.அ.து.செ) மற்றும்

ஒன்றிய பொறுப்பாளர்கள் –  சி சிவக்கொழுந்து, த.செந்தில் மு.முத்தமிழ்செல்வன், ராசா .செல்வகுமார், அ.சேக்கிழார், ஆ.ஜெய ராமன், க.சிற்றரசு, பெ. கோபிநாதன், ராமச்சந்திரன்,  பி.வெங்கடாசலம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *