‘‘உலகம் பெரியார் மயம் – பெரியார் உலக மயம்’’ என்ற தத்துவத்தை முன்வைத்து திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடி செலவில் பெரியார் உலகம் அமைக்கும் பணி தமிழர் தலைவர் ஆசிரியர் பெரும் முயற்சியில் நடைபெற்று வருகிறது.
‘‘தந்தை பெரியார் அவர்கள் சென்னை பெரியார் திடலை வாங்கும் போது பெரியார் திடல் வாங்குவதற்கு மேலாக நிதியை மக்கள் அள்ளித் தந்ததைப் போல் பெரியார் உலகத்திற்கும் வாரி வழங்குங்கள்’’ என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ‘விடுதலை’ அறிக் கையின் மூலம் அன்பு வேண்டுகோள் விடுத்தார்கள்.
எப்பொழுதும், எந்த வேண்டு கோளையும் தந்தை பெரியார் காலம் முதலே தொடங்கி வைக்கும் தஞ்சை மாநகரம், பெரியார் உலகம் நிதியிலும் முதலில் தொடங்கி வைத்தது.
கடந்த ஜூன் மாதத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் காப்பாளர் அய்யனார் ரூ.1 லட்சம், மாவட்ட தலைவர் அமர்சிங் ரூ.1 லட்சம், டாக்டர் த.தமிழ்மணி ரூ.2 லட்சம், டாக்டர் த.அருமைக்கண்ணு ரூ.2 லட்சம், பொறியாளர் தஞ்சை சிவானந்தம் ரூ.1 லட்சம், பிள்ளை&சன் சீனிவாசன் ரூ.50 ஆயிரம் என மொத்தம் ரூ.7,50,000 தஞ்சை மாநகரம் முதல் தவணையாக கொடுத்தது.
10-10-2025 அன்று 17,52,000 இரண்டாவது தவணையாக கொடுக்கப் பட்டது.
அதில் தஞ்சை குடல் நோய் மருத்துவ நிபுணர்
டாக்டர் சு. நரேந்திரன் அவர்களும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம்
ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கியிருந்தார்.
11-10-2025 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் டாக்டர் மருததுரை அவர்கள் ரூ.50,000 வழங்கினார்.
இதுவரை தஞ்சை மாநகரக் கழகம் மொத்தம் ரூ.25,52,000 வழங்கியுள்ளது.
‘‘பெரியார் உலகம் நிதி திரட்டும்பணி தஞ்சையில் முடிவடையாது; தொடரும், தொடர்ந்து கொடுப்போம், கொடுத்துக் கொண்டே இருப்போம்’’ என்பதை உறுதியுடன் தெரிவித்திருந்தோம்.
தஞ்சை மாநகரம் மட்டுமே இந்தத் தொகையை வழங்கியுள்ளது. இன்னும் பிற ஒன்றியங்களிலும், நகரங்களிலும் உரிய பங்களிப்பைச் செய்ய நிச்சயம் தோழர்கள் சேர்ந்து உழைத்து இலக்கை நிறைவு செய்வோம்.
– மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்