ஜெய்ப்பூர், அக்.12 ராஜஸ்தானில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் 50,000-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 84 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ‘ஒரே சீருடை’ என்ற நடைமுறையைக் கொண்டு வர ராஜஸ்தான் அரசு தீவிரமாக உள்ளது.
ஏற்ெகனவே, 80,000-க்கும் மேற் பட்ட அரசுப் பள்ளிகளில் இஸ் லாமிய மாணவிகள் தலையை மறைக்க அணியும் ஹிஜாப் ஆடைக்குத் தடை விதிக்கப்பட்டுள் ளது. தற்போது, ஒரே சீருடை என்ற பெயரில் பெரும்பாலான கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியத் தனியார் பள்ளிகளிலும் ஹிஜாப் அணிவதைத் தடுக்கும் நோக்குடன் அரசு களமிறங்கியுள்ளது.
இது தொடர்பாக, அரசின் மறைமுக மிரட்டல்களை எதிர்த்துப் பல தனியார் பள்ளிகள் நீதிமன்றம் சென்றன. முதலில் தனியார் பள்ளிகளின் சீருடை விதிகளில் அரசு தலையிடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், ராஜஸ்தான் அரசு மேல்முறையீடு செய்ததைத் தொடர்ந்து, மாநில அரசுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலம் முழுவதும் ஒரே சீருடை என்ற நடைமுறை விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. தனியார் பள்ளிகள் தங்கள் தன்னாட்சியில் அரசு தலையிடுவதாகக் கூறி தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளன. ஏற்ெகனவே, கருநாடகாவில் பாஜக அரசு இஸ்லாமிய மாணவிகள் அணியும் ஹிஜாப்பிற்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. தற்போது, ராஜஸ்தான் மாநில பாஜக அரசும் இஸ்லாமிய மாணவிகள் அணியும் ஆடை மீது கண் வைத்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கல்வியை வழங்குவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, சீருடை மற்றும் மத அடையாளங்களில் கவனம் செலுத்துவதாக விமர் சனங்கள் எழுந்துள்ளன.