பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத செய்தியாளர் சந்திப்பு: ‘பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது!’ – பிரியங்கா

1 Min Read

புதுடில்லி, அக்.12 பெண் பத்திரிகையாளர்கள் இல்லாத செய்தியாளர் சந்திப்பை பிரதமர் மோடி அனுமதித்திருக்கக் கூடாது என்று கண்டனம் தெரிவித்து பெண் பத்திரிகை யாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் பிரியங்கா காந்தி கருத்து தெரி வித்துள்ளார்.

ஆப்கன் வெளியுறவு அமைச்சா் அமீா்கான் முத்தாகி 6 நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு கடந்த 9.10.2025 அன்று வந்தடைந்தார். இந்த நிலையில், புதுடில்லியிலுள்ள ஆப்கன் தூதரகத்தில் 10.10.2025 அன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை  அமைச்சர் அமீா்கான் முத்தாகி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் பத்திரிகையாளர்கள்கூட இல்லை. இந்நிகழ்வில் பெண் பத்திரிகை யாளர்களோ அல்லது ஊடகத் துறையைச் சேர்ந்த பெண்களோ ஒருவர்கூட இல்லாதது, திட்டமிட்டே பெண்கள் புறக்கணிக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு பெண்களுக்கு எதி ரான கடுமையான சட்டங்கள் பின்பற்றப் பட்டு வரும் நிலையில், இந்தச் செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று ஆப்கன் தலைமை தீர்மானித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து பெண் பத்திரிகையா ளர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா நேற்று (11.10.2025) பிரதமர் மோடிக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். அதில், ‘செய்தியாளர் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் நீக்கப்பட்டது குறித்து பிரதமர் மோடி என்ன நினைக்கிறார் என்ப தைத் தெளிவுபடுத்த வேண்டும்.

மகளிர் உரிமைகளுக்காக நீங்கள் அளிக்கும் அங்கீகாரம் என்பது, ஒவ்வொரு தேர்தலின்போதும் நீங்கள் உயர்த்திப்பிடித்து முன்மொழிந்து பேசும் நடத்தைகள் மட்டு மல்ல என்பது உண்மையானால், இந்தச் செயல், அதாவது இந்தியாவின் மிக சாமர்த்தியமான சில பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி, பெண்களை நாட்டின் முதுகெலும்பாகவும் நாட்டின் பெருமையாகவும் கொண்ட நம் நாட்டில் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது?’ என்ற கேள்வியை எழுப்பி கண்டனம் தெரி வித்துள்ளார் பிரியங்கா.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *