பாபநாசத்தைச் சேர்ந்தவரும், சென்னையில் வசிப்பவருமான 17 வயது மாணவர் புவி ஆற்றல் இலங்கை தலைமன்னாரிலிருந்து தமிழ்நாட்டின் தனுஷ்கோடி வரை கடலில் நீச்சலடித்து, இளம் வயதில் கடலைக் கடந்த மாற்றுத் திறனாளி என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார்.
மாஸ்டர். புவிஆற்றல். (வயது 12) [01.12.2012] – சென்னை முகப்பேர் மேற்கு வேலம்மாள் வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். மாற்றுத் திறனாளியான இவர் சிறந்த நீச்சல் வீரர்.
“எதுவும் முடியும் எல்லோராலும், முயற்சியும் பயிற்சியும் வெற்றியை யேத் தரும்” என்னும் நோக்கத்தோடு, 2022 ஆண்டு தனது பயிற்சியை தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், செனாய் நகர், சென்னையில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் சதீஷ்குமார் அவர்களுடைய வழிகாட்டுதலோடு தன்னுடைய நீச்சல் பயணத்தை தொடங்கினார்.
2024 ஆண்டு கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் ஒரு தங்கப்பதக்கமும், இரண்டு வெள்ளி பதக்கங் களும் வென்றார். இவருக்கு திறந்தவெளி கடலில் நீந்துவது மிகவும் பிடித்தமான ஒன்று.
கடந்த இரு ஆண்டுகளாக விடுமுறை நாட் களில் கோவளம் கடலில் பயிற்சி செய்கிறார்.
தற்போது உலக சாதனைக்காக இவர் இலங்கை தலைமன்னாரில் இருந்து இந்தியா தனுஷ்கோடி வரையான 30 கிலோமீட்டர் தூரத்தைத் தனி ஒருவராக நீந்தி உலக சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.
உலகத்திலேயே இளம் வயது மாற்றுத் திறனாளி நீச்சல் வீரராக உள்ளார். இந்த முயற்சிக்கும் வெற்றிக்கும் காரணமானவர்கள் என இவர் குறிப்பிடுவது – தலைமைப் பயிற்சியாளர் சதீஷ்குமார், துணைப் பயிற்சியாளர்கள் – கோபி. சின்னசாமி, கார்த்திக் குணசேகர், மற்றும் செல்வம் ஆகியோர்.
03.10.2025 பிற்பகல் 01.30 மணியளவில் அனைத்து சோதனைகளும் முடிக்கப்பட்டு படகில் இலங்கை தலைமன்னார் நோக்கி புறப்பட்டனர். மாலை 07.00 மணியளவில் இலங்கை தலைமன்னார் கடற்கரையில் கடலில் இலங்கை அரசின் சோதனைக்காக காத்திருந்தனர்.இரவு 08.00 மணி யளவில் இலங்கை அரசின் சோதனைகள் முடிக்கப்பட்டு காத்திருந்தனர்.
04.10.2025 அதிகாலை 2.45 க்கு இலங்கை தலைமன்னாரில் தனது உலக சாதனை பயணத்தை தொடங்கிய புவிஆற்றல் நண்பகல் 11.50 மணியளவில் இந்தியா தனுஷ்கோடி கரையை அடைந்தார்.
இவர் தனது சாதனையை 09 மணி 11 நிமிடங்களில் நேரத்தில் முடித்து சாதனை ஏற்படுத்தினார்.
புவிஆற்றல் உலக சாதனை ‘WORLD BOOK OF RECORDS LONDON’-இல் பதிவுசெய்யப்பட்டது
காலையிலிருந்தே மழை பெய்து கொண்டிருந்தாலும் கரையில் உறவினர்களும், அவர்களது நண்பர்கள் குடும்பங்களும் ஆவலு டன் காத்திருந்தனர்.
இந்திய அரசின் அதிகாரிகள் தங்களின் வழக்கமான சோதனை களை முடித்துக்கொண்ட பின்னர் சாதனையாளர் புவி ஆற்றலுக்கு இந்திய தேசியக்கொடியினைப் போர்த்தி விழாப் பந்தலுக்கு அழைத்து வந்தனர்.
பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வில் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இந்தியாவின் தென்பகுதி அலுவலர் அன்கிடா ஷா, புவிஆற்றலுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்கள்.
தலைமைப் பயிற்சியாளர் சதீஷ்குமார் புவிஆற்றல் நீந்திவந்தது பற்றி எடுத்துரைத்தார்.
ராமநாதபுரம் வேலு மாணிக்கம் குழுமத்தின் தலைவர்கள் வேலு மனோகரன், வேலு கதிரேசன், ரோட்டரி மாவட்டம் 3212 ஆளுநர் ஜெ. தினேஷ் பாபு, தொடர்ந்து சென்னை வேலம்மாள் கல்வி நிறுவன முதல்வர் சூரியா பேகம், வேலம்மாள் கல்வி நிறுவனத் தலைமை ஆசிரியர் கிருபா, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் ஒன்றிய திமுக செயலாளர் கோ.தெட்சிணா மூர்த்தி, தங்கச்சிமடம் மேனாள் ஒன்றியக்குழு உறுப்பினரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவருமான பேரின்பம், ராமேஸ் வரம் ரோட்டரி சங்கத் தலைவர் சுரேஷ் நடராஜன், ரோட்டரி சங்கச் செயலாளர் இரவி ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினார்கள்.
புவிஆற்றல் தாத்தாவும், பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளருமான வி.மோகன் நன்றி கூறி முடித்தார்.
புவிஆற்றல் நெடிய பாரம்பரியம் கொண்ட சுயமரியாதை இயக்க குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவரது கொள்ளுத் தாத்தா, கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியைச் சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் வை.விசுவநாதன். இவர் தந்தை பெரியார் அவர்க ளோடு மன்னார்குடி, வடசேரி, மயிலாடுதுறை, வலங்கை மான், கும்பகோணம், பாபநாசம் பகுதி களில் களப் பணியாற்றியவர்.
இவருக்கு அடுத்த தலைமுறை இவரது சகோதரி மகன் கணேசன்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டே இயக்கப் பணியும் செய்தவர். பாபநாசம் கபிஸ்தலத்தில் மூடநம்பிக்கை ஊர்வலம் 1983,1984 ஆண்டுகளில் நடத்தியவர். தொடர்ந்து விளையாட்டு மன்றம் அமைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களையும், அப்போது மதுரை ஆதீனமாக இருந்த அருணகிரிநாதர் அவர்களையும் அழைத்துக் கூட்டம் நடத்தி இளைஞர்களை ஈர்த்தவர்.
பெரியார் கல்வி சமூகப்பணி அறக்கட்டளை, திராவிட சமுதாய நல கல்வி அறக்கட்டளை, கணபதி அக்ரகாரம், டாக்டர் வீரமணி – மோகனா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, அழகிய மணவாளன். வீரமணி – மோகனா நூல் நிலையம், பெரியார் மருத்துவ ஆய்வகம், கபிஸ்தலம் ஆகிய நிறுவனங்களை உருவாக்கினார்.
இவரது முயற்சியால் தொடங்கப் பட்டதே தந்தை பெரியார் அறிவியல், கலை, பண்பாடு, விளையாட்டு மன்றம், கபிஸ்தலம். அதன் ஒரு பிரிவே தமிழ் மக்கள் கலைவிழா. ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை மய்யப்படுத்தி அந்தி முதல் விடியல் வரை நாடுப்புறக் கலைகளுக்கு முக்கியத்துவமளித்து 19 ஆண்டுகளாக கணேசன் மறைவுக் குப் பின்னும் அவரது அமைப்பால் நடத்தப்பட்டு வருகிறது..
இதே நேரம் பெரியார் சேவை மய்யம், கபிஸ்தலம் தொடங்கினார். மருத்துவ முகாம், விழிக்கொடை, குருதிக்கொடை முகாம் முதலியவற்றை மக்களிடையே விழிப் புணர்வு ஏற்ப்படுத்தி, அதன் தொடர்ச்சியாக உடற்கொடை விழிப்புணர்வை அவ்வமைப்பு கணேசன் மறைவுக்குப் பின்னும் செய்து கொண்டிருக்கிறது.
சுயமரியாதைச் சுடரொளி தி.கணேசன் – பொம்மி கணேசன், (பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வி.மோகனின் சகோதரி) ஆகியோரின் மகன் பெரியார் செல்வன். இவர் மூன்றாம் தலைமுறை. மருமகள் பத்மபிரியா [திருபுவனம் மதனகோபால் – ருக்மணி ஆகியோரின் மகள்]
இவர்களது மகன் தான் புவி ஆற்றல். இவர் நான்காம் தலைமுறை
இவர்களது குடும்பம், இவர்களது உறவினர்கள் என பல குடும்பங்கள் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்த குடும்பங்கள்.
இவரது உறவினர் குடும்பங்களில் இயக்கத்தைச் சாராதவர்கள் கூட தலைவர் தந்தை பெரியார் மேல் பற்று கொண்டவர்கள். இயக்கத்தின் மீது பெருமதிப்பு கொண்டவர்கள்.
புவிஆற்றலின் தந்தை தனது பணிக்காக குடும்பத்தினருடன் சென்னையில் முகப்பேர் மேற்கு பகுதியில் வசிக்கிறார்.
மாணவர் புவிஆற்றல் பெரியார் பிஞ்சுகள் பழகுமுகாமில் பங் கேற்றவர் என்பது குறிப்பிடத்தகக்து.