டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
* உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திட ரேவந்த் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘தலைமை நீதிபதி தாழ்த்தப்பட்ட வகுபபைச் சேர்ந்தவர் என்பதால் தாக்கினார், இதற்கு முன்பு இதுபோன்ற தாக்குதல் நடந்ததில்லை’: வழக்குரைஞர் கிஷோர் மீது பட்டியல் ஜாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஒன்றிய அமைச்சர் அதாவாலே. கோரிக்கை.
* அரசாங்கங்கள் உயர் கல்விக்கு போதுமான அளவு செலவிடவில்லை: ஏ.அய்.சி.டி.இ. தலைவர் சீத்தாராம் குறிப்பிட்டுள்ளார்.
தி இந்து:
* ’ஹால்’ மலையாளத் திரைப்படத்தில் இருந்து மாட்டிறைச்சி பிரியாணி சாப்பிடுவது மற்றும் பல காட்சிகளை நீக்க ஒன்றிய அரசின் சென்சார் போர்டு நிர்ப்பந்தம்.
* பீகாரில் தேர்தலில் வெற்றி பெற்றால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்: தேஜஸ்வி அறிவிப்பு
தி டெலிகிராப்:
* பீகாரின் வாக்காளர் திருத்தம்: தேர்தலுக்கு முன் விலக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களுக்கு இலவச சட்ட உதவி வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
– குடந்தை கருணா