கபிஸ்தலம், அக். 10- கும்பகோணம் கழக மாவட் டம், பாபநாசம் ஒன்றிய பகுத் தறிவாளர் கழகத்தின் சார்பில் கபிஸ்தலத்தில் 27.9.2025 அன்று மாலை 06.00 மணிக்கு மணி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி பழைய வளாகத்தில் சிந்தனைக் களம் – 8 நடைபெற்றது.
கூட்டத்திற்கு பாபநாசம் நகர துணைத் தலைவர் உ. நாகராஜ் தலைமையேற்று உரை யாற்றினார். சு.கலியமூர்த்தி ஒன்றிய செயலாளர் முன்னிலை ஏற்றார். குடந்தை மாவட்ட கழக துணை செயலாளர் து. சரவணன் வருகை புரிந்தோரை வரவேற்றுப் பேசினார்.
தொடக்கத்தில் இலுப்பக் கோரை வெ. இராவணன் பெரியாரை தாம் நேரில் பார்த்ததையும், அப்போது நடந்த நிகழ்வுகளையும், அப்போது அய்யா அவர்களது செயல்பாடு களையும் எடுத்துரைத்தார்.
“பெரியார் – கேள்வி குறி? ஆச்சரியக்குறி! என்னும் தலைப்பில் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு. திருவடிக் குடில் சுவாமிகளை உரையாற்ற அழைத்த மாநில பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.மோகன், சுவாமிகளை அறிமுகம் செய்து வைத்து பயனாடை அளித்து மரியாதை செலுத் தினார். கழக ஒன்றியச் செயலாளர் சு.கலியமூர்த்தி சுவாமிகளுக்கு ஆசிரியரின் வாழ்வியல் சிந்தனைகள் நூலை வழங்கினார்.
பெரியாரின் தத்துவம்
அதன் பிறகு சிறப்புரையாக “திருவடி குடில் சுவாமிகள் “பெரியாரின் பகுத்தறிவுக் கேள்விகளையும் சாதனைகளை யும் ஆச்சரியமாக வியந்து பெரியாரின் தத்துவம் எதை எதிர்த்து?..ஏன் எதிர்த்து? என்பதை பல நிகழ்வுகளை சுட்டிப் பேசினார்.
ஜாதி, மத பிரிவினைகளையும் அதன் இழிவுகளையும் ஆரிய – திராவிட போராட்டமான தமிழ் இன உரிமைக்கு பெரியார் எப்படி போராடினார் என உரையாற்றினார்.
மாதந்தோறும் நடை பெறும் சிந்தனைக் களம் நிகழ்வில் தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு நினைவு பரிசுகளை ஒன்றிய பகுத்தறி வாளர் கழக செயலாளர் கு.ப சங்கர், எஸ்.பி.அய். ஆறுமுகம் ஆகியோர் வழங்கினார்கள்.
திருவடிக் குடில் சுவாமிகளின் உதவியாளர் சேகருக்கும் பூண்டி நரசிம்மனுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
“செயல்படத் தூண்டு”
குடந்தை “செயல்படத் தூண்டு” என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கே. தவ்பிக் அலி சிறப்புரை ஆற்றிய திருவடி குடில் சுவாமிகளுக்கு தனது அமைப்பின் சார்பில் பயனாடை போர்த்தி நினைவுப் பரிசும் கொடுத்து பாராட்டினார்.
நிகழ்வின் தலைவர் உ.நாகராஜுக்கும் பொன்னாடை அணிவித்தார்.
தமிழ் அறிஞர் விருது பெற்ற “கோடையிடி “குருசாமி அவர்களுக்கு திருவடிகுடில் சுவாமிகள் பயனாடை அணி வித்து ஆசிரியர் அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் நூல் வழங்கி சிறப்பித்தனர்.
பாவை நகர தலைவர் வெ. இளங்கோவன் மணி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி நிர்வாகிகளுக்குக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் பொறுப்பாளர்களுக்கும் நன்றி உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியை சே. நெப் போலியன், சே. ஆனந்தகுமார், சா. வரதராஜன், கோவி. பெரியார் கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.