புதுடில்லி, ஆக.10 டில்லி யில், பாலஸ்தீனத்துக்கு ஆதர வாக இடதுசாரி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டில்லியின், ஜன்தர் மந்தர் பகுதியில், இஸ்ரேலுடனான அனைத்து ஆயுத ஒப்பந்தங் களையும் ரத்து செய்ய வேண் டுமெனவும், பாலஸ்தீனத்தின் விடுதலைக்கு ஒன்றிய அரசு ஆதரவளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியும், நாட்டின் முக்கிய இடதுசாரி கட்சிகள் நேற்று (அக். 9) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, சிபிஅய் (எம்எல்), ஆல் இந்தியா ஃபார்வர்ட் பிளாக் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதுபற்றி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆர். அருண் குமார் கூறுகையில், இஸ்ரேல் எனும் நாடு உருவானது முதல் பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடைபெற்று வருவ தாகவும், அமெரிக்காவின் ஆதர வின்றி இஸ்ரேலினால் இந்தத் தாக்குதல்களை நடத்தியிருக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
இத்துடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி அமர்ஜித் கவுர் கூறியதாவது:
“இடதுசாரிகளும் இந்திய மக்களும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். மேலும், ஒன்றிய அரசு இஸ்ரே லுடன் எந்தவொரு வர்த்தக உறவு களையும் வைத்துக் கொள்ளக் கூடாது” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.