இருமல் மருந்து கொடுக்கப்பட்ட 20 குழந்தைகள் பலி: நிறுவன உரிமையாளர் கைது

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

போபால், அக்.9-  மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில், இருமல் மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் மோசம டைவதும் அடுத்தடுத்து உயிர்ப்பலிகள் நிகழ்ந்ததும் நாடு முழுவதும் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

20 குழந்தைகள் பலி

ஒன்றியப் பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்தி ருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. நச்சுத்தன்மை கொண்ட கோல்ட்ரிப் இரு மல் சிரப்பை உட்கொண் டதால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு காரணமாக குழந்தைகள் இறந்ததாக தெரியவந்து உள்ளது.  இருமல் மருந்து சாப்பிட்ட 5 குழந்தைகள் அண்டை மாநிலமான மராட்டியத்தின் நாக்பூரில் தீவிர சிகிச்சையில் உள்ளனர். 2 குழந்தைகள் எய்ம்ஸ் மருத்துவமனையிலும், 2 குழந்தைகள் அரசு மருத்துவமனையிலும், ஒருவர் நாக்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்தக் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி செய்து வருகிறார்கள்.  இறப்புகளுக் குக் காரணமான சிரப் தமிழ்நாட்டின் காஞ்சி புரத்தைச் சேர்ந்த ‘்சிறீசன் பார்மா’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இதனையடுத்து கோல்ட்ரிப் இருமல் சிரப்பை தயா ரிக்கும் நிறுவனத்தின் உரிமை யாளரைக் கைது செய்ய சிந்த்வாராவைச் சேர்ந்த ஒரு காவல்துறை குழு, தமிழ்நாட்டின் காஞ்சி புரத்திற்கு விரைந்தது.

உரிமையாளர் கைது

இந்த நிலையில், இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநா தனை ம.பி. காவல் துறை யினர் தற்போது கைது செய்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் இருந்தவரை கைது செய்த காவல்துறையினர்சுங்குவார்சத்திரம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோல்ட்ரிப் மருந்து, தமிழ்நாட்டில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனை யகங்களில் இருக்கலாம் எனக்கூறப் படுகிறது.அந்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த நிறுவனத்தின் மருந்து தயாரிப்புக்கான உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கையும் எடுக் கப்பட உள்ளது. இதில், சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *