புதுடில்லி, அக்.9 உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை காலணியால் தாக்க முயன்ற விவகாரத்தில் வழக்குரைஞர் மீது ஒன்றியஅரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தி யுள்ளார்.
தலைமை நீதிபதி மீது நடத்தப்படும் தாக்குதல் அரசியலமைப்பின் மீதும் ஜனநாயக மதிப்புகள் மீதும் தாக்குதல் நடத்துவதற்கு சமம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளதாவது, ”மனுஸ்மிருதி, ஸனாதனம் ஆகிய பெயரில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்த முற்படுவது வருந்தத்தக்க செயல்.
இந்திய தலைமை நீதிபதியை அவமதித்ததை நான் கண்டிக்கிறேன். தலைமை நீதிபதி மீது காலணியை வீசும் மனநிலையில் ஒரு வழக்குரைஞர் இருந்தால், அவர் அந்த இடத்தில் மறுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பணியிடை நீக்கமும் செய்யப்பட வேண்டும்.
மனு ஸ்மிருதி மற்றும் ஸநாதன தர்மத்தின் பெயரால் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுபவர்கள் சமூகத்தில் தேவையற்ற பதற்றத்தை உருவாக்கி அமைதியைக் குலைக்க முயற்சிக்கிறார்கள்;
அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.