மூத்த பத்திரிகையாளர் சுதந்திர சிந்தனையாளர் டி.ஜே.எஸ். ஜார்்ஜ் மறைந்தார்

1 Min Read

பெங்களூருவில் இறுதிக் காலத்தில் வாழ்ந்த மூத்த பத்திரிகையாளர் டி.ஜே.எஸ். ஜார்ஜ், 97ஆம் வயதில் வயது மூப்பு காரணமாக 3.10.2025 அன்று காலமானார். கேரளாவைப் பிறப்பிடமாகக் கொண்டு, கல்லூரிக் கல்வியை சென்னையில் முடித்த அவர் பத்திரிகைப் பணியில் சேர்ந்திட பம்பாய் சென்றார். 1950இல் ‘திஃபிரி பிரஸ் ஜர்னல்’ (The Free Press Journal) இதழில் ஒரு கேலிச் சித்திரக் கலைஞராக இருந்தவரும் – பின்னாளில் சிவசேனா இயக்கத்தின் நிறுவனத் தலைவராக இருந்தவருமான பால் தாக்கரே  அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

பீகாரின் பாட்னாவிலிருந்து வெளிவந்த  சர்ச் லைட் (Search Light), ஹாங்காங்கிலிருந்து வெளிவந்த  ஃபார் ஈஸ்டர்ன் எக்னாமிக் ரிவ்யூ (Far Eastern Economic Review) இதழ்களின் ஆசிரியராகவும் இருந்தார். தனது மாநிலத்தவர், தனது நாட்டினர் என்பதையெல்லாம் கடந்து உலகளாவியப் பார்வையுடன் பத்திரிகை உலகில் பயணித்தார்.

தந்தை பெரியாரைப் பற்றி டி.ஜே.எஸ். ஜார்ஜ் பதிவிட்டுள்ளது, தலைவர்களைப் பற்றிய கூர்மையான, துல்லியமான தன்மையை சுட்டிக் காட்டிய வகையில் இருந்தது.

‘‘பெரியார் அற்புதமான சிந்தனையாளர், அவரது புதுமையான கருத்துருக்கள் அவரை உலக வரலாற்றின் அறிஞர்கள் வரிசையில் கொண்டு போய்ச் சேர்க்கிறது. வேறு கால கட்டத்தில் – வேறு சூழலில் அவர் உலக சீர்திருத்தவாதியாகக்கூட கொண்டாடப்பட்டிருப்பார்.’’

கடைசிக் காலங்களில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் கட்டுரை  எழுதி வந்தார். பல நூல்களைப் படைத்துள்ள அவர் இறுதியாக எழுதிய நூலின் தலைப்பு: ‘தி டிஸ்மேன்ட்லிங் ஆஃப் இந்தியா’ (The Dismantling of India).

பாரபட்சமின்றி தனது கூர்மையான, நேர்மறையான எழுத்துகளில் நாட்டு நடப்பினை எழுதிய துணிச்சல் மிக்க எழுத்தாளரைப் பத்திரிகை உலகம் இழந்திருக்கிறது. டி.ஜே.எஸ். ஜார்ஜ் மறைவில் துயருறும் அவரது மகன் ஜீத்தையில் (சாகித்ய அகடாமி விருது பெற்றவர்) மற்றும் பத்திரிகை உலகத் தோழர்களுக்கு ஆறுதலையும், இரங்கலையும் ெதரிவித்துக் கொள்கிறோம்.

 கி.வீரமணி
 தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
9.10.2025

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *