வாசிங்டன், அக்.9- சுவீடன் நாட்டைச் சேர்ந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் (வயது 22), பருவநிலை மாற்றம் குறித்து பன்னாட்டு அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தனது சிறு வயதில் இருந்தே சமூக ஆர்வலராக வலம் வரும் கிரேட்டா தன்பெர்க், உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.
இந்தநிலையில் கிரேட்டா தன்பெர்க் இஸ்ரேல் தாக்குதலால் சின் னாபின்னமான காசாவுக்கு கப்பல் மூலமாக உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கிரேட்டா தன்பெர்க் கொண்டு சென்றார். அவருடன் பல நாடுகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் சென்றனர். அப்போது அவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் இடைமறித்து சிறைவைக்க ப்பட்டு, அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
இதுதொடர்பாக கிரெட் டா தன்பெர்க் சுவீடனில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது இஸ்ரேல் ராணுவம் தங்களை மிகவும் மோசமாக நடத்தியது என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் இதனை இஸ்ரேல் ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த நிலையில் கிரேட்டாவின் நடவடிக் கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். அவர், “கிரெட்டா தன்பெர்க் ஒரு பைத்தியம்போல செயல்படுகிறார். எப் போதும் மூர்க்கமாக உள்ளார். பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார். அவர் நல்ல ஒரு மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்” என்று கிண்டலாக தெரிவித் துள்ளார்.
அதே சமயம், டிரம்ப்புக்கும் இதே பிரச்சினை இருக்கிறது என்று கிரேட்டா தன்பெர்க் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “கோபத்தை கட்டுப்படுத்துவது குறித்து டிரம்ப்பிடம் ஏதேனும் ஆலோசனைகள் இருந்தால் நான் அதை ஏற்றுக்கொள்வேன்.
ஆனால் அவரது கடந்தகால செயல் பாடுகளைப் பார்த்தால் அவருக்கும் இதே பிரச்சினை இருப்பதாக தெரிகிறது” என்று கூறியுள்ளார்.