பெங்களூரு, அக்.9- கருநாடகாவில் ஜாதிவாரி கணக்கெடுப்புப் பணிகளுக் கான காலக்கெடு நீட் டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் இந்த பணி யில் ஈடுபடுவதற்காக பள்ளிகளுக்கு அக்டோ பர் 18ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து கருநாடக முதலமைச்சர் சித்தராமையா பெங்களூரு வில் கூறியதாவது: கரு நாடகாவில் சமூக,கல்வி, பொருளாதார கணக்கெ டுப்புப் பணிகள் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 7ஆம் தேதியுடன் முடிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கணக்கெடுப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடைய வில்லை.
கொப்பல் மாவட் டத்தில் 97 சதவீதமும், உடுப்பி 63 சதவீதமும், தட்சிண கன்னட மாவட் டத்தில் 60 சதவீதமும் மட்டுமே பணிகள் முடிவடைந்துள்ளன. அனைத்து மாவட்டங் களிலும் 100 சதவீதம் கணக்கெடுப்பு முடிக்கும் வகையில் அக்டோபர் 17ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப் புப் பணியில் 1.2 லட்சம் ஆசிரியர்கள், 40 ஆயிரம் இதரப் பணியாளர்கள் என ஈடுபட்டுள்ளனர். இந்த பணியில் ஆசிரி யர்கள் முழுமையாக ஈடு படும் வகையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 18ஆம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வுகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இந்த கணக்கெடுப்புப் பணி யிலிருந்து விலக்கு அளிக் கப்படும்.
கணக்கெடுப்புப் பணி யின் போது உயிரிழந்த 3 ஊழியர்களின் குடும் பங்களுக்குத் தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். இந்த பணியில் பங்கேற்காத அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதல மைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.