ஆலங்குடி, அக். 9- அறந்தாங்கி கழக மாவட்ட பெரியார் உலக நிதி திரட்டல் குழு கலந்துறவாடல் கூட்டம் 8.10.2025 அன்று மாலை 6 மணிக்கு ஆலங்குடி திமுக அலுவலகத்தில் மாவட்டக் கழகத் தலைவர் க.மாரிமுத்து தலைமையில், நிதி திரட்டல் குழு ஒருங்கிணைப்பாளர் கறம்பக்குடி க.முத்து, செயலாளர் குப்பக்குடி இரா.இளங்கோ, பொருளாளர் நெய்வத்தளி க.வீரையா, துணைத் தலைவர் செகதை ச.குமார் ஆகி யோர் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இலட்சிய திட்டமான பெரியார் உலகத்திற்கு நன்கொடை திரட்டும் பணியின் அவசியத்தை விளக்கி தொடக்கவுரையாற்றினார்.
நிதி திரட்டல்குழு துணைச் செயலாளர் ப.மகாராசா, உறுப் பினர்கள் த.சவுந்தர்ராசன்,,ஆ.வேல்சாமி, மாங்காடு சுப.மணி யரசன், புதுக்கோட்டை விடுதி இரா.மேகநாதன், கறம்பக்குடி ந.அம்பிகாவதி, செகதைஆ.யோவான், குப்பக்குடி த.முருகேசன்,இராசா , தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஆகி யோர் கருத்துரை வழங்கினார்கள்.
நன்கொடை திரட்டி தர அறிவித்தவர்கள்
செகதைகுமார்-ரூ.5-இலட்சம், குப்பக்குடி இரா.இளங்கோரூ.3-இலட்சம், கறம்பக்குடி ந.அம்பிகாவதி ரூ.5-இலட்சம், நெய்வத்தளி க.வீரையா ரூ.1-இலட்சம், அறந்தை ஆ.வேல்சாமிரூ.2-இலட்சம், ப.மகாராசாரூ.25 ஆயிரம், மாங்காடு சுப.மணியரசன்ரூ.25ஆயிரம்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1-மாவட்ட இளைஞ ரணி செயலாளர் செகதாப்பட்டனம் யோவான் தந்தையார் ஆரோக்கிய சாமி மறைவுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழர் தலைவரின் இலட்சிய திட்டமான பெரியார் உலகத்திற்கு மாவட்டக்கழகம்சார்பில் ரூ.10-இலட்சம் நிதிதிரட்டிதருவதென தீர்மானிக்கப்படுகிறது.
ஆலங்குடியில் பெரியார் உலக நிதியளிப்புவிழா நடத்துவதெனவும், இம்மாத இறுதியில் தேதியளித்து உதவுமாறு தமிழர் தலைவர் அவர்களை இக்கூட்டம் வேண்டிக் கேட்டு க்கொள்கிறது.