புதுடில்லி, அக். 8- பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6,11ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படும். நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்றத்தின் பதவிக் காலம் நவம்பர் 22ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், மாநில சட்டமன்ற தேர்தலுக்கான அட்டவணையை டில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் 6.10.2025 அன்று வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பீகார் சட்டமன்றம் தேர்தல் தொடர்பாக மாநில அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பெறப்பட்ட ஆலோச னைகளை பரிசீலித்து தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்டன.
அதன்படி, வரும் நவம்பர் 6,11ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக பீகார் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும். வாக்கு எண்ணிக்கை நவ. 14ஆம் தேதி நடைபெறும். முதல்கட்ட தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் அக்டோபர் 18ஆம் தேதியும், 2ஆம் கட்ட தேர்தலுக்கான மனு தாக்கல் அக்டோபர் 21ஆம் தேதி யும் தொடங்கும்.
பீகாரில் மொத்தம் 243 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. முதல் கட்ட தேர்தலின்போது 121 தொகுதி களுக்கும், 2ஆம் கட்ட தேர்தலின்போது 122 தொகுதி களுக்கும் வாக்குப்பதிவு நடை பெறும். மாநிலத்தில் 3.92 கோடி ஆண்கள். 3.50 கோடி பேர் பெண்கள் உட்பட மொத்தம் 7.43 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். முதல்முறையாக 14 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 100 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 14,000 பேர் உள்ளனர்.
இரு கட்ட வாக்குப்பதிவின் போது மாநிலம் முழுவதும் 90,712 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும். இதில் 1,044 வாக்குச்சாவடிகளை பெண்கள் நிர்வகிப்பார்கள். 1,350 வாக்குச் சாவடிகள், முன் மாதிரி வாக்குச் சாவடிகளாக அமைக்கப்படும்.
பீகார் தேர்தலில் முதல் முறையாக 17 புதிய மாற்றங்கள் அமல் செய்யப்பட உள்ளன. இதன்படி வாக்குப்பதிவு இயந் திரங்களில் வேட்பாளர்களின் வண்ண ஒளிப்படம் இடம் பெறும். கட்சி சின்னம், பெயர்கள் தெளிவாக தெரியும்படி அச்சிடப்படும். முறையாக ஒவ் வொரு தொகுதிக்கும் ஒரு மத்திய பார்வையாளர் நியமிக்கப்பட உள்ளார்.
பீகார் தேர்தலுக்காக ‘இசிஅய் நெட்’ என்ற பெயரில் புதிய செயலி அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இதில் தேர்தல் தொடர்பான அனைத்து சேவைகளை யும் பெறலாம். அனைத்து வாக்குச்சாவடி களிலும் வெப் கேமரா பொருத் தப்படும். இதுவரை இல்லாத அளவுக்கு சுதந்திரமாக, மிகுந்த வெளிப்படைத்தன்மை, நேர் மையுடன் தேர்தல் நடத்தப்படும்.
ஜம்மு காஷ்மீரில் பட்காம், நாக் ரோட்டா தொகுதிகள், ராஜஸ்தானில் அன்டா, ஜார்க்கண்டில் காட்ஷிலா, தெலங்கானாவின் ஜுப்ளி ஹில்ஸ், பஞ்சாபில் தரண் தரண், மிசோரமில் தம்பா, ஒடிசாவில் நவுபாடா ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். இந்த தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.