பல மாநிலங்களில் தேர்தல் நெருங்குகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் கவலை!

புதுடில்லி, அக். 8- உரிமை  கோரப்படாமல் இருக்கும் நிதி நிறுவனத்தில் உள்ள பணத்தை உரியவர்களிடம் சேர்க்க வேண்டுமாம்! நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் நிதி நிறுவனங்களில் தேங்கி எவருக்கும் பயன்படாத நிலையில் உள்ள தொகையினை உரியவர்களிடம் கொண்டு செல்லப் போவதாக ஒன்றிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்தல் கால அரசியலில் நிகழும் இதுவரை இல்லாத அக்கறையினை வெளிப்படுத்தும் கவலைகளை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் வங்கிகள், ரிசர்வ் வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், மியூச்சுவல் நிதி நிறுவனங்கள், சேம நல நிதி கணக்குகள் மற்றும் இதர நிதி நிறுவனங்களில் ரூ.1.84 லட்சம் கோடி நீண்ட காலமாக உரிமை கோரப்படாமல் முடங்கியுள்ளது. இந்த நிதி என்பது உரியவர்களுக்குச் சொந்தமானது. அரசு தன் சொந்த நிதியாகக் கருத முடியாது.

மேற்குறிப்பிட்ட நிதி நிறுவனங்களில் பணம் சேமித்தவர்கள், காப்பீடு பத்திரம் பெற்றவர்கள், அவர்கள் இறந்துபோன நிலையில் அவர்களின் நியமனதாரர்கள் (Nominee) அல்லது வாரிசுதாரர்களுக்கு நிறுவனங்களில் தேங்கியிருக்கும் அவர்களுக்கு உரிய நிதி பற்றிய விவரம் தெரியாமலேயே இருக்கும் நிலை பரவலாக உள்ளது. உரியவர்களைத் தேடி கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய பணத்தை அளித்திட வேண்டும் என நிறுனங்களுக்கு இப்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இதுநாள் வரை நிதி நிறுவனங்களில் உரிமை கோரப்படாமல் தேங்கியிருந்த பணத்தை சில மாநிலங்களில் தேர்தல் நெருங்கும் நிலையில் தனது ‘அசாதாரண’ அக்கறையினை ஒன்றிய பா.ஜ.க. அமைச்சர் வெளிப்படுத்தியுள்ளார்.

உரிமை கோரப்படாமல் நிறுவனங்களில் நிதி தேங்கப்படுவதைத் தடுத்திட நிறுவனங்களில் சேமிப்பு, வைப்புத் தொகை கணக்கு உள்ளவர்கள் உடனே தங்களின் ஒவ்வொரு கணக்கிற்கும் ஒரு நியமனதாரரை (Nominee), ரிசர்வ் வங்கியின் விதியின் கீழ் பரிந்துரைத்திட வேண்டும். நியமனதாரர் பதியப்பட்ட ஒப்புதல் சீட்டை நிதி நிறுவனங்களிடமிருந்து பெற்று பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். நியமனதாரர்களுக்கும் தெரியப்படுத்துவது நல்லது. பணம் செலுத்துபவரை வைப்புத் தொகை வாடிக்கையாளரை நியமனதாரர் எதுவும் செய்ய முடியாது. பணம் செலுத்தியவரின் உயிர் போன பிறகுதான் நியமனதாரர்  அந்த பணத்தை உரிய ஆதாரங்களாக காட்டி பெற்றுக் கொள்ள முடியும். இதேபோல காப்பீட்டு திட்டங்களிலும் நியமனதாரர் முறை உள்ளது. மியூச்சுவல் நிதி நிறுவனங்கள் மற்றும் சேம நல நிதி (Provident Fund) மக்கள் சேம நல நிதி (Public Provident Fund) என அனைத்திலும் நியமனதாரரை நியமிக்க பணம் செலுத்துபவருக்கு உரிமை உண்டு. நியமனதாரரை எத்தனை முறை மாற்ற நினைத்தாலும் கணக்கு வைத்திருப்பவர் அதனை பரிந்துரைக்க முடியும். இறப்பு என்பது இயற்கை. எனவே தங்களின் வாழ்நாளிற்குப் பிறகு, தங்களது கணக்குகளில் உள்ள பணத்தை யாருமே கோரப்படாமல் இருந்திடும் நிலையினைத் தவிர்க்க, நியமனதாரரை ஒவ்வொரு கணக்கிற்கும் பரிந்துரைக்க வேண்டியது கடமை. அப்படிப்பட்ட நியமனத்தை உரியவருக்கு தெரிவிப்பது கூடுதல் கடமை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *