புதுடில்லி, அக்.8- டில்லியில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் பெண்களுக்கு எதிரான வன்முறை மிக மோசமான அளவில் அதிகரித்து வருகிறது.
குஜராத், உத்தரப்பிர தேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைப் போன்று, டில்லியும் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்குப் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லா மாநிலமாக மாறியுள்ளது.
இந்நிலையில், டில்லியின் ஆதர்ஷ் நகரில் ஒரு விடுதியில் மருத்துவ மாணவியை ஒரு மாதமாக தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
அரியானாவின் ஜிந்த் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் ஆதர்ஷ் நகரில் உள்ள விடுதியில் தங்கி அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் பயின்று வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் 20 வயது இளைஞர் ஒருவர் செப்டம்பர் 9 ஆம் தேதி தெருவில் உள்ள அனைவருக்கும் விருந்து வைப்பதாகக் கூறி ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்து மருத்துவ மாணவியை சுயநினைவை இழக்கச் செய்து, அந்த இளைஞர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தொடர்ந்து அவரது நண்பர்கள் 2 பேர் பாலியல் வன்கொடுமை செய்தனர். செப்டம்பர் 9 ஆம் தேதி நடந்த சம்பவத் திற்குப் பிறகு, அந்த இளைஞர்கள் 3 பேரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காட் சிப் பதிவை சமூக ஊட கங்களில் வெளியிடுவதாக மிரட்டி, செப்டம்பர் மாதம் முழுவதும் பலமுறை அந்தப் பெண்ணை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.