நாகர்கோவில், மே 22- குமரி மாவட்ட கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர், வடிவீசுவரம் ப.சங்கர நாராயணனின் நினை வேந்தல் நிகழ்ச்சி குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர் கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது.
பெரியார் பெருந் தொண்டர் ப.சங்கர நாராயணனின் படத் திற்கு மாவட்ட திரா விடர் கழகம் சார்பாக மாலை அணிவித்து வீர வணக்கம் செலுத்தப்பட் டது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலை வர் ச. நல்ல பெருமாள், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் உ.சிவ தாணு, மாநில பொதுக் குழு உறுப்பினர் ம.தயா ளன் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர். தோழர்கள் அவரின் கடந்த கால இயக்க செயல்பாடு களை நினைவு கூர்ந்தனர்.
மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் சிறப்புரை யாற்றினார். மாவட்ட கழக அமைப்பாளர் ஞா. பிரான்சிஸ், மாவட்ட பக செயலர் பெரியார் தாஸ், மாவட்ட கழக இளைஞ ரணி தலைவர் இரா.இராஜேஷ், அமைப்பா ளர் மு.இராஜசேகர், மாந கர துணைத் தலைவர் ஹ.செய்க்முகமது, கன்னியாகுமரி கிளைக் கழக அமைப்பாளர் க. யுவான்ஸ், மாவட்ட திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா. கோகுல், கழகத் தோழ ர் கள் ச.ச.மணிமேகலை, ம. செல்வராசு, பெனடிக்ட், ந.தமிழ் அரசன், கூடங் குளம் பால கிருஷ்னன், இரா.முகிலன், டார்ஜன், சவுந்தர் மற்றும் ஏராள மான தோழர்கள் பங் கேற்றனர்.