காலத்தால் என்றும் பேசப்படும் மாநாடாக அமைந்த சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டினை மிகுந்த எழுச்சியோடு நடத்திட பெரும் உதவியாக இருந்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களை சந்தித்துத் தலைமைக் கழகத்தின் சார்பில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் செம்பியன், மாவட்டச் செயலாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன், சமத்துவ மணி ஆகியோர் நெஞ்சம் நிறைந்த நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் அவர்களிடம் தொலைப்பேசியில் நன்றி கூறினார்.
(சென்னை, 7.10.2025)
102 வயதாகும் பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க. சண்முகம், 103 வயதாகும் பெரியார் பெருந்தொண்டர்
ஆத்தூர் தங்கவேலு ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.
மாநாட்டில் பங்கேற்ற தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி அவர்களுக்கு கவிஞர் கலி. பூங்குன்றனும்,
தொல். திருமாவளவன் எம்.பி., (விசிக) அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், எம்.ெஹச். ஜவாஹிருல்லா (ம.ம.க) அவர்களுக்கு வீ. குமரேசன் அவர்களும், மு. வீரபாண்டியன் (இ.கம்யூனிஸ்ட்) அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் பயனாடை அணிவித்தனர்.
திண்டிவனம் திராவிடர்கழக இளைஞரணி செயலாளர் கடவம்பாக்கம் பொ. தேவராஜ், சவுந்தர்யா இணையர் அடிமைச் சின்னமான தாலியை கழகத் தலைவர் ஆசிரியர் முன்னிலையில் அகற்றினர். அவ்விணையர்களுக்குச் சால்வை போர்த்திப் பாராட்டினார்
தமிழர் தலைவர் உடன்: அனைத்துக் கட்சி பிரமுகர்கள்.
ஆ. வந்தியத்தேவனுக்கு (மதிமுக) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பயனாடை அணிவித்தார்