திராவிட மாடல் ஆட்சிக்குப் பாராட்டும் வாழ்த்தும்! (2)

மறைமலை நகரில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் 28 தீர்மானங்கள் நிறைேவற்றப்பட்டன.

முக்கியமான தீர்மானம் ஒன்றை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் மாலைப் பொழுது மாநாட்டில் முன்மொழிந்தார்.

‘தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று வாழ்நாள் எல்லாம் அக்கொள்கை வழி நின்று எத்தனையோ இடர்ப்பாடுகளுக்கும், தடைகளுக்கும் இடையே இயக்கப் பணியாற்றி தியாகத் தீயில் குளித்தெழுந்த ‘சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு’ இம்மாநாடு தலை தாழ்ந்த வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது’ என்ற தீர்மானத்தைத் திராவிடர் கழகத் தலைவர் முன்மொழிந்த நிலையில், மேடையில் இருந்த முதலமைச்சர் முதல் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான இயக்கத் தோழர்களும், பொது மக்களும் எழுந்து நின்று கழகத் தலைவர் எடுத்துச் சொன்ன வரிகளைத் தொடுத்துச் சொன்னார்கள்.

‘வீர வணக்கம்! வீர வணக்கம்!! சுயமரியாதைச் சுடரொளிகளுக்கு வீர வணக்கம்!’’ என்று முழக்கமிட்ட காட்சி உன்னதமானது! கருப்பு மெழுகுவத்திகளாக தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு சமுதாயத்திற்கு ஒளி தந்தவர்கள் சுயமரியாதைச் சுடரொளிகள் தானே!

அந்த ஒரு நிமிடம் உள்ளப் பூர்வமானது – மறைந்த தோழர்களுக்கு மனம் திறந்த மரியாதையுமாகும்.

ஓர் இயக்கம் என்று வரும்போது அதற்கு நான்கு இலக்கணங்களை வரையறுத்தார் தந்தை பெரியார்.

(1) உத்தமமான தலைமை

(2) உறுதியான கொள்கை

(3) உண்மையான தொண்டர்கள்

(4) யோக்கியமான பிரச்சாரகர்கள் – என்று வரையறையை வழங்கினார் தந்தை பெரியார்.

இந்த இலக்கணத்திற்கு ஏற்ப இயக்கத் தலைமையும் இயக்கத் தோழர்களும், பிரச்சாரகர்களும் தன்னை மறந்து, தன் வீட்டை மறந்து, விடும் மூச்செல்லாம் சுயமரியாதையே என்ற உணர்வோடு உழைத்த தியாகத் தீயில் குளித்தெழுந்த அந்தச் ‘சுயமரியாதைச் சுடரொளிகள்’ என்ற அடிக்கட்டுமான பலத்தில் எழுப்பப்பட்ட பெருவாழ்வுதான் இன்று நாம் பெற்றுள்ள உரிமைகளும், வாய்ப்புகளும், வாழ்வும் என்பதை மறந்தால் நம்மைவிட நன்றி கெட்டவர்கள் யாரும் இருக்க முடியாது!

நன்றியுடையோர் நாம் என்று காட்டுவதே அந்த வீர வணக்கத் தீர்மானமாகும்.

அந்த சுயமரியாதை இயக்க – திராவிட இயக்க அடிப்படையில் பீடு நடைபோடும் ஆட்சிதான் – இப்பொழுது நடைபெறும் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியாகும். அந்த ஆட்சியின் சாதனைகளைப் பாராட்டும் தீர்மானமும் பட்டியலிட்டால் விரியும் என்பதற்காகவே சாறு பிழிந்து தருவது நமது கடமையாகும்.

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் 2021 மே 7 அன்று பதவியேற்றார். கரோனா தொற்றுநோய். ஊரடங்கு மற்றும் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், அவரது ‘திராவிட மாடல்” ஆட்சி சமூக நலன், கல்வி, சுகாதாரம், பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது.

2025 ஏப்ரல் வரை 4 ஆண்டுகளில், தமிழ்நாடு இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் 9% பங்களிப்பு செய்து, 8.19% வளர்ச்சி (இந்திய சராசரியில் 7.24%) அடைந்துள்ளது.

  1. பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் ஈர்ப்பு

இந்தியாவின் மொத்த ஜிடிபியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 9% – இது முதல் சாதனை – மாநில ஜிடிபி 8.19%.

2021-2025 வரை ரூ68,375 கோடி முதலீடுகள் ஈர்த்தல்.

மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் சிப்காட் தொழிற்சாலை 20லிருந்து 50+ ஆக உயர்த்தல் (34 மாவட்டங்களில்) ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலம்

பணவீக்கம் 5.97% (இந்தியாவின் பணவீக்கம் 6.65%). அய்க்கிய நாடுகள் அமைப்புகள் மற்றும் ஒன்றிய அரசு நிறுவனங்கள் தமிழ்நாட்டின் நிர்வாகத்தை பாராட்டியுள்ளன.

GDP வளர்ச்சி: 2024-2025இல் 11.19% வளர்ச்சி அடைந்தது. இது இந்தியாவின் 2ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாட்டை உயர்த்தியது. இது முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் 5.59% வளர்ச்சியை இரட்டிப்பாக்கியது. 2025 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, அய்ரோப்பா பயணத்தில் (ஆகஸ்ட் 2025) முதலீடுகளை ஈர்த்தார் முதலமைச்சர்.

முதலீடுகள்: 2021 முதல் ரூ.10.62 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்த்தல், 922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் – 2025 செப்டம்பரில். தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் இரு உலகளாவிய கப்பல் கட்டும் தளங்கள்  அமைக்க   புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. 55,000 வேலைவாய்ப்புகள் (10,000+ நேரடி). தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்தி கொள்கை 2025 அறிமுகம்.

டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பம்: செப்டம்பர் 19, 2025 அன்று, சிருசேரியில் Equinix டேட்டா சென்டர் (ரூ.574 கோடி முதலீடு) இது சென்னையை உலக டிஜிட்டல் கிரிடில் இணைத்தது.

சிப்காட் மற்றும் ஏற்றுமதி: சிங்காட் பூங்காக்கள் 50+ ஆக உயர்த்தல். 2025ல் ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் இடம்.

  1. சமூக நலத்திட்டங்கள்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் 1.15 கோடி பெண்களுக்கு மாதம் ரூ1,000 உதவித்தொகை.

‘மகளிர் விடியல்’  கட்டணமில்லாப் பேருந்து பயணத்தின் மூலம்: 2021 முதல் 30 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைத்துள்ளனர். பெண்களுக்கு உள்ளாட்சியில் 33% இலிருந்து 50% இடஒதுக்கீடு உயர்த்தல்.

  1. சமூகநீதி மற்றும் சமத்துவம்

அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனம் (2021 ஆகஸ்ட் முதல்)

மாநில இந்து சமய அறநிலையத் துறையில் அனைத்து ஜாதிகளுக்கும் பதவிகள்.

  1. சமூக நலத் திட்டங்கள்

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: 15 லட்சம் + குழந்தைகள். 2025 ஆகஸ்ட் முதல் நகர்ப்புற பள்ளிகளுக்கும் அரசு உதவிப் பள்ளிகளுக்கும்  விரிவாக்கம் (3 லட்சம் குழந்தைகள்). செப்டம்பர் 20, 2025 அன்று, 26 மாவட்டங்களில் ரூ.94 கோடி செலவில் 94 வகுப்பறை கட்டடங்கள் திறந்து வைத்தல். ரூ.277 கோடி மதிப்பில் 243 பள்ளிகளில் உள்கட்டமைப்பு

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மற்றும் முகாம்கள்: 2025 செப்டம்பர் 19 அன்று, தியாகராய நகர் முகாமில் மக்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு.

சிறுபான்மையினர் நலன்: செப்டம்பர் 22, 2025 அன்று, சிறுபான்மையினர் திட்டங்களுக்கான சிறப்புக் குழு அமைத்தல்.

பிற்படுத்தப்பட்டோர்/சமூகநீதி: செப்டம்பர் 22 அன்று, ரூ.3.94 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள், ரூ.161.44 கோடி மதிப்பில் 8 சமூகநீதி விடுதிகளுக்கு அடிக்கல்.

  1. அடிப்படையான வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு

l சாலை விபத்துகளில் பாதிக்கப்பட்டோருக்கு இலவச சிகிச்சை, மெட்ரோ ரயில், சாலை விரிவாக்கம்.

l 2025இல் நெடுஞ்சாலைத் துறைக்கு புதிய ஆட்கள் நியமனம்.

இந்த சாதனைகள் 2021-2025 வரை கரோனா சவால்களைத் தாண்டி, திராவிட சமூகநீதி அடிப்படையில் அமைந்தவை. 2026 தேர்தலுக்கு முன், “திராவிட மாடல் 2.0” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு இந்தியாவின் வழிகாட்டி மாநிலமாகத் திகழ்கிறது.

  1. கல்வி மற்றும் இளைஞர் மேம்பாடு

– இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தகைய மக்கள் நல திராவிட மாடல் ஆட்சிமைப்பைப் பாராட்டுவது சுயமரியாதை நூற்றாண்டு நிறைவு மாநாட்டில் முதலமைச்சரை வாழ்த்துவது முக்கிய கடமையாகும். காரணம் இந்த ஆட்சி சுயமரியாதை இயக்க திராவிட மாடல் ஆட்சியல்லவா!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *