தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநரும், சிறந்த வரலாற்று ஆய்வாளரும், தொல்லியல் அறிஞருமான நடன.காசிநாதன் அவர்கள் தமது 85-ஆம் வயதில் இன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம்.
தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையின் மூலம் வரலாற்றை நிறுவியவர்களுள் முக்கியமானவர்
திரு. நடன. காசிநாதன் அவர்கள் ஆவார்கள். அவரது நாணயவியல் ஆய்வுகள் ‘தமிழ்நாட்டின் முத்திரைக் காசுகள்’ வட இந்திய நாணயங்களைவிட காலத்தால் மூத்தவை என்பதை நிறுவின.
அவரது மறைவு தமிழ்ப் பேருலகத்துக்கும், திராவிட வரலாற்று ஆய்வுகளுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
– கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
6.10.2025
சென்னை